Breaking News

செய்தித்துறை அதிகாரிகளின்- அண்ட புளுகு…ஆகாச புளுகு… ஊழல் செய்தித்துறை அதிகாரிகளுக்கு ஜால்ரா ஏன்?- எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்..

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக அரசில் பிப்ரவரி 2021ல் அச்சு ஊடங்கள், டிவி மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்ட வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரத்துக்கு ஏழு விளம்பர ஏஜென்சி வழியாக ரூ64.93கோடி திமுக ஆட்சியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ரூ64.93கோடியில் 25 சதவிகிதம் கமிசன் அச்சு ஊடகங்கள், டிவி மீடியாக்களிடமிருந்து பெறப்பட்டு அதில் 20 சதவிகிதம் அதாவது ரூ13கோடி செய்தித்துறை அதிகாரிகள் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனினி உதவியாளர் ராஜகோபால் உள்ளிட்டவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதி ரூ3கோடி கமிசன் ஏழு விளம்பர ஏஜென்சிகளும், விளம்பரம் கொடுக்கப்பட்டதற்கு ஏற்ப பிரித்துக்கொண்டார்கள் என்று செய்தி 22.09.2021 மக்கள்செய்திமையத்தில் வெளியானது.

  மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முதல்வரின் செயலாளர்(மூன்று) எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் மக்கள்செய்திமையம் செய்தி தவறானது. இன்னும் ரூ64.93கோடி பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

  செய்தித்துறையின் ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு சில கேள்விகள் பதில் சொல்லுவாரா?

  1. வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரத்துக்கு ரூ64.93 கோடி திமுக ஆட்சியில் அதாவது இன்று வரை கொடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படையாக அறிக்கையாக ஏன் வெளியிடவில்லை?
  2. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி நாம் கேட்ட கேள்வி ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பரங்களின் விவரங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகை விவரங்கள் அளிக்கவும்..

பதில்…வெற்றி நடைபோடு தமிழகம் விளம்பரத்திற்கு மொத்த செலவினம் ரூ64.93கோடி

 கேள்வி..வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை விவரங்கள் பத்திரிகைகள், டிவி மீடியாக்கள் வாரியாக அளிக்கவும்.

பதில்…வ.எண்.1. உள்ள பதில் இதற்கும் பொருந்தும்.. வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரத்திற்கான மொத்த செலவினம் ரூ64.93கோடி..

 செய்தித்துறை இணை இயக்குநர்(கள விளம்பரம்), பொதுத் தகவல் அலுவலர் ச.செல்வராஜ் அளித்துள்ள பதில்..

செல்வராஜ் அளித்துள்ள பதில் படி, ரூ64.93கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.  இதற்கு எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

  • வெற்றி நடைபோடும் தமிழகம் மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்ட விளம்பர ஏஜென்சிகளின் விவரங்கள் அளிக்கவும்.. இதற்கு ஏழு விளம்பர ஏஜென்சிகளின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் இதற்கு பதில் சொல்லுவாரா?
  • செய்தித்துறையின் கூடுதல் இயக்குநர் அம்பலவாணன்  MOULIS ADVERTISING SERVICE PVT LTD நிறுவனத்தின் நிர்வாகி ரமேஷ் ஆசியுடன் அம்பலவாணனின் பினாமி விளம்பரம்ஏஜென்சியாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் விளம்பரங்கள் MOULIS ADVERTISING SERVICE PVT LTD மூலம் வெளிவருகிறது..இது முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு தெரியுமா?
  • FLAME AGENCY மாஜி அமைச்சரும், அதிமுக அவைத்தலைவரும், மறைந்த மதுசூதனனின் உறவினர் அசோக்குமார் கூடுதல் இயக்குநர் அம்பலவாணனை சுற்று வலம் வருகிறார். அம்பலவாணன், அமைச்சர் சேகர்பாபு சிபாரிசு செய்தார் என்று அண்ட புளுகு கதையெல்லாம் சொல்லுகிறார். இது எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு தெரியுமா?
  • தமிழக அரசு 09.08.2021ல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அச்சிடப்பட்ட எண்ணிக்கையின் விவரங்கள் மற்றும் செய்தித்துறை வழியாக பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விவரங்கள் அளிக்கவும்.

நிதித்துறை பொதுத் தகவல் அலுவலர் ஜெயபிரகாஷ் அளித்த பதிலில் வெள்ளை அறிக்கை 2021-2022 செய்தித்துறை வழியாக பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை தமிழ் -100, ஆங்கிலம் -100 என்று  கூறியுள்ளார். ஆனால் செய்தித்துறை இணை இயக்குநர் செல்வராஜ் அளித்துள்ள பதிலில் மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை நகல்கள் அத்துறையினால் பத்திரிகையாளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது என்று அண்ட..புளுகு…ஆகாச புளுகு கதை கூறியுள்ளார். 

இதற்கு முதல்வரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் என்ன பதில் சொல்லப்போகிறார்..

 இப்படி அண்ட புளுகு..ஆகாச புளுகு கதையெல்லாம் சொல்லும்  ஊழல் செய்தித்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் செயலாளர் எம்.ஏஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் ஜால்ரா போடுவது ஏன்?

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *