Breaking News

செய்தித்துறையா… ஊழல் துறையா.. அதிமுக அரசின்- வெற்றி நடைபோடும் தமிழகம்- விளம்பரம் ரூ64.93கோடி- கமிசன் ரூ16கோடி.. திமுக ஆட்சியிலும் தொடரும் கமிசன்…கரெப்சன் – கலெக்சன்..

  தமிழக அரசின் செய்தித்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில்  ஊழல் துறையாக மாறி, எழிலழகன் ஆதரவு அதிகாரிகள் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றார்கள். அதிமுக அரசில் பிப்ரவரி 2021ல் வெளியிடப்பட்ட வெற்றி நடைபோடு தமிழகம் விளம்பரத்தின் செலவு ரூ64.93கோடி. இதில் விளம்பரம் ஏஜென்சிகள் மூலம் செய்தித்துறை அதிகாரிகளுக்கு ரூ13கோடி கமிசனும், விளம்பரம் ஏஜென்சிகளுக்கு ரூ3கோடி கமிசன் என ரூ16கோடி கமிசன் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியில் செய்தித்துறை அமைச்சராக மு.பெ.சாமிநாதனும் ஊழல் அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டார். செய்தித்துறையின் ஊழல் அதிகாரிகள் இன்னும் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்.

அதிமுக அரசில் பிப்ரவரி 2021ல் வெளியிடப்பட்ட வெற்றி நடைபோடு தமிழகம் விளம்பரத்தின் செலவு ரூ64.93கோடி. இதில் விளம்பரம் ஏஜென்சிகள் மூலம் செய்தித்துறை அதிகாரிகளுக்கு ரூ13கோடி கமிசனும், விளம்பரம் ஏஜென்சிகளுக்கு ரூ3கோடி கமிசன் என ரூ16கோடி கமிசன் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மாஜி கூடுதல் இயக்குநர் மற்றும் மாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சிறப்பு அதிகாரி மற்றும் புரோக்கர் எழிலழகன் மூலம் செய்தித்துறை அதிகாரிகளுக்கு கமிசன் பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. திமுக அமைச்சர் சாமிநாதனின் உதவியாளர் ராஜகோபாலும் கமிசன் பெற்றுள்ளார்.

 அதிமுக அரசின் வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம்  கொடுப்பட்ட ஏஜென்சிகளின் பட்டியல்..

  1. எக்செலண்ட் -2 பப்ளிசிட்டீஸ்  சென்னை-2
  2. பிளேம் அட்வர்டைசிங் பிரைவேட் லிமிட், சென்னை-4
  3. பிரைட் அட்வர்டைஸ்மெண்ட், சென்னை-2
  4. மார்க் மீடியா கம்யூனிகேஷன்ஸ், சென்னை-34
  5. ஐடியா பிராண்ட் சொலுயூஷன்ஸ், சென்னை-34
  6. எலிகண்ட் பப்ளிசிட்டிஸ், சென்னை -2
  7. கிரையான்ஸ்  அட்வர்டைசிங் பிரைவேட் லிமிட், சென்னை-34

இந்த ஏழு விளம்பரம் ஏஜென்சிகள் வழியாக  வெற்றி நடைபோடும் விளம்பரம் அச்சு ஊடகங்கள், டிவி மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  வெற்றி நடைபோடும் விளம்பரத்தில் செலவு ரூ64.93கோடி… இதில் அச்சு ஊடகங்கள், டிவி மீடியாக்களிடம் 25 சதவிகிதம் கமிசன் பெற்றது. அதாவது ரூ16கோடி கமிசனாக பெற்று, 20 சதவிகிதம் அதாவது ரூ13 கோடி கமிசன் செய்தித்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளது. மீதி ரூ3கோடியை ஏழு விளம்பரம் ஏஜென்சிகளுக்கும் கிடைத்துள்ளது.

 அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வெற்றி நடைபோடும் விளம்பரத்தின் தொகை ரூ64.93கோடி திமுக ஆட்சியில் பணம்  பட்டுவாடா செய்யப்பட்டது என்பது வேடிக்கையாகவும் இருக்கிறது… வேதனையாகவும் இருக்கிறது.

 திமுக ஆட்சியிலும் செய்தித்துறையில்  கமிசன் – கரெப்சன் –கலெக்சன் தொடருகிறது.

 வெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம் தொகை, கமிசன் தொடர்பாக மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *