Breaking News

ஊரக வளர்ச்சி இயக்குநரகம்- MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி ஸ்வாஹா… இந்தியன் வங்கி கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?- அமைச்சர் பெரியகருப்பன் மெளனம் ஏன்?…

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில்  ஊழல் வேலுமணி மற்றும் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் முத்துமீனாள் MGNREGS ஊழியர்கள் பெயரில் ரூ122.97கோடி மோசடியை அரங்கேற்றியுள்ளார்கள்.

 கொரோனா சிறப்பு ஊதியமாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்  மார்ச் 2020 மாதம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டு நாட்களுக்குகான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதல் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் மாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மாஜி ஊழல் வேலுமணியும் அறிவித்தார்கள்.

மாஜி ஊழல் வேலுமணியின் ஆசியுடன்  ஊரக வளர்ச்சி இயக்குநராக இருந்த டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் முத்துமீனாள்(மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி),ஊழல் வேலுமணியின் உதவியாளர் முரளி உள்ளிட்ட மாபியா அதிகாரிகள் கோப்புகளில் ரூ123.10(ரூ122.97கோடி) கோடி இரண்டு நாள் ஊதியம் சிறப்பு ஊதியமாக கொடுத்ததாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் 26,84,989 மக்களுக்கு ஊதியம் போய் சேரவில்லை. ரூ122.97 கோடியும் ஸ்வாஹாவா?

  1. MGNREGS ஊழியர்கள்  – 26,84,989
  2. 2019-2020  ஒரு நாள் கூலி –ரூ229
  3. மார்ச் 2020ல் இரண்டு நாள் சிறப்பு ஊதியம் என்றால் ரூ458..
  4. சின்ன கணக்கு     26,84,989 X ரூ 458= ரூ 122,97,24,962(ரூ122.97கோடி)
  5. National payment corporation of india Rs 0.45/per

Transaction = 26,84,989X0.45                                     ரூ12,08,245

           ஆக மொத்தம் ரூ122,97,24,962+ரூ12,08.245 = ரூ123,09,33,207(ரூ123.10கோடி)

அதாவது 26,84,989 ஊழியர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு ஊதியமாக கூடுதல் அளித்த வகையில் செலவு ரூ123.10கோடி என கோப்புகளில் மட்டும் உள்ளது.

 ஆனால் இதற்காக உத்தரவு கடிதம் எண்.48900/2019/MGNREGS –I-2 தேதி 06.04.2020ல் தான் வெளியானது.

 உண்மையில் மார்ச் 2020ல் 25 இலட்சம் பேர்தான் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றியதாக கிராம பஞ்சாய்த்து மற்றும் பஞ்சாய்த்து யூனியன் ஆவணங்களில் உள்ளது.

 ஆனால் 1,84,989 பேர் கூடுதலாக பணிபுரிந்தாக அதாவது 25,00,000 + 1,84,989= 26,84,989 பேர் பணிபுரிந்ததாக கோப்புகளில் மாறுதல் செய்யப்பட்டு, ரூ122.97கோடி கொடுத்ததாக கோப்புகளில்  உள்ளது.

 மார்ச் 2020 26,84,989 பேருக்கும் இரண்டு நாள் சிறப்பு ஊதியம் வழங்கப்படாமல் ரூ122.97கோடி மோசடி நடந்துள்ளது.

 கொரோனா பெயரில் சிறப்பு  இரண்டு நாள் ஊதியம் கூடுதலாக கொடுப்பதற்காக இந்தியன் வங்கியின் சைதாப்பேட்டை கிளையில் புதிய வங்கி கணக்கு எண்.6872437692 தொடங்கப்பட்டது.

 மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிய 26,84,989 பேருக்கு மார்ச் 2020 மாதம் சிறப்பு இரண்டு நாள் ஊதியம் வழங்கப்படவில்லை. அதாவது ரூ122.97கோடி கொள்ளையோ..கொள்ளை.. மோசடி நடந்துள்ளது.

 ரூ122.97 கோடி மோசடி தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மூவருக்கும் புகார் அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 ரூ122.97 கோடி தொடபுடைய இந்திய வங்கியின் கணக்கு எண்.6872437692ன் வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிடுமா?

 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், ரூ122.97 கோடி மோசடி விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்?

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *