Breaking News

உள்ளாட்சி தேர்தலுக்கு- எழுது பொருட்கள் கொள்முதலில் மோசடி.. சென்னை எவர்ஷைன் நிறுவனம்- கொள்ளையோ..கொள்ளை..

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான எழுது பொருட்களை கொள்முதல் மோசடி நடந்துள்ளது. சென்னையை சேர்ந்த எவர்ஷைன் கூட்டுறவு நிறுவனம் மெகா விலை மோசடி அரங்கேற்றி உள்ளது.

  தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட அதிமுக அரசின் ஊழல் மாஜி அமைச்சர்கள், ஊழல் அதிகாரிகள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சு என்று கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து 120 நாட்கள் கடந்த நிலையுலும் மாஜி ஊழல் அமைச்சர்கள், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  1. விழுப்புரம் மாவட்டம் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் ஐ.ஏ.எஸ் ந.க.எண்.பிசி3/5092/2021 தேதி இல்லை. எவர்ஷைன் மல்டிப்பர்ஸ் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி, சென்னை14ல்  வாக்குசாவடிக்கு தேவையான வாக்குபதிவு பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.
  2. கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என், ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் ந.க.எண்.பிசி1/2957/2021 தேதி 11.09.2021 எவர்ஷைன் மல்டிப்பர்ஸ் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி, சென்னை14ல்  வாக்குசாவடிக்கு தேவையான வாக்குபதிவு பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டார்.

எவர்ஷைன் மல்டிப்பர்ஸ் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி, சென்னை14 நிறுவனம் இரண்டு மாவட்டங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் விலை பட்டியலை பாருங்கள்..

 எவர்ஷைன் மல்டிப்பர்ஸ் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி அடிக்கும் கொள்ளை..

   பொருட்கள்… ஒன்று                 விழுப்புரம்  மாவட்டம்                கள்ளக்குறிச்சி மாவட்டம்

  1. வரைபட குண்டுசீகள்                 ரூ 39.55                                     ரூ46.00
  2. உருளை முனை பேனா              ரூ4.45                                         ரூ4.90
  3. கெட்டி அட்டை                          ரூ3.95                                         ரூ4.60
  4. ஒட்டு பசை                                 ரூ22.15                                       ரூ24.80
  5. முத்திரை அரக்கு                        ரூ22.85                                        ரூ26.90
  6. மெழுகுவர்த்தி                             ரூ19.85                                       ரூ23.40
  7. தீப்பெட்டி                                   90பைசா                                      90பைசா
  8. பட்டிகை அல்லது நாடா             ரூ31.55                                  ரூ36.20
  9. கோணிப்பை                         ரூ98                                                ரூ109.70
  10. ஊசி                                       ரூ3.55                                              ரூ3.70
  11. வெள்ளை முறுக்கு நூல்         ரூ8.85                                               ரூ9.20
  12. ஸ்டாம்ப் பேடு                        ரூ30.55                                           ரூ36.00
  13. வாக்களிக்கு மறைப்பு அட்டை – ரூ129.00                                          ரூ155.60
  14. உலோக முத்திரை –                   ரூ55.00                                           ரூ61.60
  15. வாக்குபதிவு சுவரொட்டி              ரூ29.00                                          ரூ32.40
  16. வாக்குச் சாவடி எண் சுவரொட்டி – ரூ14.75                                        ரூ16.50
  17. வாக்குபதிவு அலுவலர்களுக்கன  வில்லை – ரூ3.75                              ரூ4.20
  18. அம்புக்குறி முத்திரை                        ரூ16.00                                       ரூ17.90
  19. சணல் கயிறு                                      ரு21.55                                       ரூ22.60
  20. வேட்பாளர் சுவரொட்டி                      ரூ29.00                                     ரூ32.40

இப்படி 39 பொருட்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1930 பூத்துகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 2948 பூத்துகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக வாக்குபதிவு அலுவலர்களுக்கான வில்லை 23625, அனுமதி சீட்டுகள் 29,490, வாக்கு சாவடி எண் குறிப்பிடும் சுவரொட்டி 5930 என கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இப்படி கொள்முதல் செய்யப்பட்ட 39 பொருட்களில் கொள்முதல் விலையில் சென்னை எவர்ஷைன் மல்டிப்பர்ஸ் கோ-ஆப்ரேடிவ் சொசைட்டி, உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து பல லட்சம் மோசடி கொள்ளையை நடத்தியுள்ளார்கள்.

 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஐ.ஏ.எஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..

 மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கன்காணிப்பு இயக்குநரகத்துக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *