Breaking News

அதிமுக அரசின்- பொதுப்பணித்துறை & சுகாதாரத்துறையில்- கேஸ் பைப் லைனில் பல கோடி மோசடி- ராஜீவ்காந்தி மருத்துவமனையில்- சண்முகநாதனின் லீலைகள்..

 தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்ட   ஊழல் அதிமுக அரசில் கொரோனா காலத்தில் ஆக்சிஜனுடன் படுக்கை வசதி என்ற பெயரில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாஜி எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் கொள்ளையோ..கொள்ளை..

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை இளநிலை பொறியாளர் சண்முகநாதன், நான் தாண்டா தலைமைப் பொறியாளர்… நான் தாண்டா பொதுப்பணித்துறை அமைச்சர் என்று செய்யும் அட்டூழியம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

 ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இளநிலை பொறியாளர் சண்முகநாதன், நாதன் என்ற பினாமி ஒப்பந்ததாரர் மூலம் செய்யாத வேலைக்கு மதிப்பீடு தயார் செய்து, போலி பில் போட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளார். பினாமி ஒப்பந்ததாரர் நாதன் தான்  இளநிலை பொறியாளர் சண்முகநாதனுக்கு ரூ2கோடியில் அதி நவீன பங்களா கட்டிக்கொடுத்துள்ளார்.

 செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் எனக்கு 5 சதவிகிதம், அமைச்சருக்கு  7சதவிகிதம் என்று வசூல் செய்தார். அதனால் பாலசுப்ரமணியன் திருச்சி மாறுதல் செய்யப்பட்டார். பாலசுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, அமைச்சர் எ.வ.வேலு ஆசியில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.

  சில லட்சங்களில் முடிக்க வேண்டிய  கேஸ் பைப் லைன் பணிக்கு கோடிக்கணக்கில் மோசடி பில் போடப்பட்டு

    கேஸ் பைப் லைன்  மோசடி பில் பட்டியல்..பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கொள்ளை..

1.மருத்துவப் பணிகள் கோட்டம் சேலம் – ரூ4.07கோடி

2. மருத்துவப் பணிகள் கோட்டம் திருச்சி – ரூ4.10கோடி

3. மருத்துவப் பணிகள் கோட்டம் சேப்பாக்கம், சென்னை – ரூ5.63கோடி

4. ஒமாந்தூரார் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை – ரூ67.88 இலட்சம்

5. மருத்துவப் பணிகள் கோட்டம் திருவாரூர் – ரூ6.73கோடி

6. மருத்துவப் பணிகள் கோட்டம் திருநெல்வேலி – ரூ6.16கோடி

7. மருத்துவப் பணிகள்  கோட்டம் சேப்பாக்கம், சென்னை – ரூ4.60கோடி

8. மருத்துவப் பணிகள் கோட்டம் மதுரை – 2020- 2021- ரூ3.64கோடி

                                                                   2021- 2022- ரூ4.15கோடி

9. மருத்துப் பணிகள் கோட்டம்  வேலூர் – 2020-2021 – ரூ2.91கோடி

                                                                   2021-2022 –ரூ4.88கோடி

         கேஸ் பைப் லைன் பெயரில் நமக்கு கிடைத்த 9 மருத்துவப்பணிகள் கோட்டத்தில் மட்டும் போடப்பட்ட மோசடி பில் ரூ48கோடி..உண்மையில் கேஸ் பைப் லைன் பெயரில் போடப்பட்ட மோசடி பில் ரூ100கோடியை தாண்டும்..

 அதிமுக ஆட்சியில் கேஸ் பைப் லைன் மோசடி தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டுகொள்ளவே இல்லை. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு இப்படி ஒரு மோசடி நடந்தது தெரியுமா என்று தெரியவில்லை..

  கேஸ் பைப் லைன் மோசடியில் சிக்கியுள்ள, மாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாஜி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்று பொதுப்பணித்துறை மருத்துப்பணிகள் கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?

 கேஸ் பைல் லைன் மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டோம்..திமுக அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா… மோசடியோடு கூட்டணி அமைப்பார்களா என்று பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

மூத்த பத்திரிக்கையாளர் வி. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

Comments comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *