ஹெல்மெட் போடாத-அமைச்சர் விஜயபாஸ்கர்- அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?

ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் அப்பாவி நடுத்தர மக்களை மிரட்டி வழக்கு போடும் காவல்துறை, அமைச்சர்கள் ஹெல்மெட் போடாமல் இரு சக்கரவாகனம் ஒட்டுவதை எப்படி அனுமதிக்கிறார்கள். சட்டம் அனைவருக்கு சமம் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தீபாவளி அன்று இரு சக்கர வாகனத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தில் இழுப்பூரிலிருந்து  விராலிமலை, மதியநல்லூர் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்கிறார்.

 ஹெல்மெட் போடாமல் மக்களை சந்திக்கிறார். இனிப்பு வழங்குகிறார்.. இனிப்பு சாப்பிடுகிறார்..

 ஹெல்மெட் போடாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் இரு சக்கரவாகனம் ஓட்டுவது, சட்டத்துக்கு புறம்பானது.

 தமிழகத்தில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், அதிமுக எம்.பிக்கள் ஆதரவாளர்களுடன் ஹெல்மெட் போடாமல் இரு சக்கரவாகனம் ஓட்டலாம்  என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 சட்டத்தை மதிக்காமல், சட்டத்துக்கு புறம்பாக ஹெல்மெட் போடாமல் இரு சக்கரவாகனம் ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவி பறிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

  அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் போடாமல் இரு சக்கரவாகனம் ஓட்டும் போது, வழக்கு போடாத காவல்துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

 சட்டத்தை மதிக்காமல், சட்டத்துக்கு புறம்பாக ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கரின், அமைச்சர் பதவியை பறிக்க ஆளுநருக்கு மக்கள்செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது..

 

 

Comments

comments