ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்.. தூய்மை பணிக்கு தினமும் ரூ50,000.. ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனத்தின் ஊழல்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகளில் housekeeping and security servces பணிகளை ஒப்பந்தம் எடுத்த, ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின்  பினாமி நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிடி, பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் மே மாதத்துடன் முடிந்த பிறகும் வாய்மொழி உத்தரவில் பணிகள் தொடருகிறது..

 ஜனவரி 2016 முதல் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் தூய்மை பணி ஒய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிடி, பெசிலிட்டி மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீரங்கம் கோயில் தூய்மை பணிக்கு ஜனவரி 2016ல் மாதம் ரூ8.37 இலட்சம் பணம்

பட்டுவாடாவில் தொடங்கி மாதம் ரூ10 இலட்சம், ரூ16 இலட்சம் என பத்மாவதி நிறுவனத்துக்கு மாதா மாதம் ஐ.ஒ.பி காசோலை கொடுக்கப்பட்டு வருகிறது..

 ஏப்ரல் 2016ல் ரூ16.74இலட்சம், ஜனவரி 2017ல் ரூ10.92இலட்சம், மாற்ஸ் 2017ல் 17.13 இலட்சம்… இப்படி மாதா, மாதம் தூய்மை செய்யும் பணிக்கு இலட்சக்கணக்கில் பத்மாவதி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது..

 இதில் என்ன வேடிக்கை என்றால் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி நிறுவனம் தூய்மை பணி செய்யாமல், கோயிலில் பல ஆண்டுகளாக தூய்மை செய்து வருபவர்களை பயன்படுத்தி தூய்மை செய்து தினமும் ரூ200 சம்பளம் தொடக்கத்தில் கொடுத்து வருகிறது.. தற்போது பத்மாவதி நிறுவனம் தூய்மை பணி செய்யாமல் மாதா மாதம் பல லட்சம் பணம் மட்டும் காசோலையாக பெற்று வருகிறது..  ஆண்டுக்கு பல மாதங்கள் சமூக ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் அதிபர்கள்  தூய்மை செய்யும் பணிக்கு, தூய்மை பணிகளை மேற்பார்வையிடும் நபர்களிடம்  பல இலட்சங்களை நன்கொடையாக கொடுக்கிறார்கள்…

 பிறகு எதற்கு பத்மாவதி நிறுவனம் என்ற கேள்வி எழுந்துள்ளது.. ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், தொழில் அதிபருமான வேணு சீனிவாசனுக்கு, ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் அதிகாரமையத்தில் இருக்கும் போது, விதிமுறைகளை பல உதவிகளை செய்துள்ளார். அதனால் ஸ்ரீரங்கம் கோயில் தூய்மை பணி என்ற பெயரில் ராம்மோகன்ராவின் பினாமி நிறுவனமான பத்மாவதி நிறுவனத்துக்கு மாதா, மாதம் பல லட்சங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று கோயில் நிர்வாகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்கள்…

  தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்யா… ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்யா.. ஒண்ணுமே புரியவில்லையே…

 

Comments

comments