ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- யார் இந்த PAUL..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, பாதிக்கப்பட்ட கிராம மக்களின் 100 வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

 ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மக்கள் மன நிலையை மாற்ற ஸ்டெர்லைட் நிர்வாகம் PAUL என்பவரை நியமித்தது. PAUL திருநெல்வேலியில் அலுவலகம் வைத்துக்கொண்டு, விற்பனைக்கு வராத இரண்டு நாளிதழ்களில், ஸ்டெர்லைட் ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள கிராமங்களில் இலவசமாக கொடுப்பது, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வால்போஸ்டர் ஒட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

 ஸ்டெர்லைட் பி.ஆர்.ஒ இசக்கியப்பன், ஸ்ரீதர்(ஒய்வு பெற்ற டி.எஸ்.பி மகன்) இருவரையும் இயக்குவது  ஆலோசகர் PAUL .

 ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தருண் அகர்வால் தலைமையில் வந்த ஆய்வுக்குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலரை அழைத்து வந்து மனு கொடுக்க வைத்தது ஆலோசகர் PAUL தான்.ஸ்டெலைட் விவகாரத்தில் தூத்துக்குடி  மாவட்ட நிர்வாகமே  PAUL, இசக்கியப்பன், ஸ்ரீதர் மூவர் சொல்வதைதான் கேட்கிறது.

 தருண் அகர்வால் ஆய்வுக்குழுவிடம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு கொடுத்த மக்களை காவல்துறை வேனில் ஏற்றி கொண்டு போய், மூவர் அணி சொல்லும் இடங்களில் இறக்கிவிட்டார்கள்..

 அதே போல் தமிழக அரசின் கொள்கை முடிவான ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஆய்வுக்குழுவிடம் மனு கொடுத்த மக்களையும், காவல்துறை வேனில் பாதுகாப்பாக ஏன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது..

    PAUL  வி.வி மினரல்ஸ் வைகுண்டராசனுக்கு ஆலோசகராக பணியாற்றினார். வைகுண்டராசனின் NEWS -7 சேனலுக்கு, ஊழியர்களை தேர்வு செய்தவரே PAUL தான். ஆனால் தற்போது வைகுண்டராசனுடன் PAULக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பிரபலமான கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யும் பிரமுகருக்கும் தொடர்பு இருக்கிறது என்பது மத்திய அரசுக்கும் தெரியும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் விவகாரத்தில் வெளிநாட்டிலிருந்து நிதி வந்த விவகாரத்தில் கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யும் பிரமுகரை PAUL காப்பாற்றி வருகிறார். ஒரு பக்கம் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஆலோசகராக செயல்படுகிறார்.. மறு பக்கம் ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான பின்னனியில் இருந்தவர்களை காப்பாற்றுகிறார் PAUL..

 இந்த PAUL நம்பி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், தமிழகத்தில் சர்வே எடுக்கும் பணி கொடுத்திருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது..

 

Comments

comments