ஸ்டெர்லைட் ஆலை திறக்க உத்தரவு…மக்கள்செய்திமையத்தின் புகாரை ஏன் விசாரிக்கவில்லை..மூத்த அமைச்சருக்கு தொடர்பா…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கிராம மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்..100க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.. பலர் ஊனமானார்கள்..

  ஸ்டெர்லைட் நிர்வாகம் பலியான குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பல இலட்சங்களை அள்ளி கொடுத்தது.இதை ஏன் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.

 ஸ்டெர்லைட் ஆலை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி கொடுத்த 15.12.18ம் தேதி இரவு முழுவதும் ஸ்டெர்லை ஆலை நிர்வாகம், கோயில்கள், சமூக அமைப்புகள், மன்றங்கள், சங்கங்களுக்கு இலட்சக்கணக்கில் பணத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன…

 ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், வெளிநாட்டிலிருந்து சுமார் ரூ200கோடி பணம் தூத்துக்குடிக்கு வந்துள்ளது. மக்கள்செய்திமையத்திற்கு ரூ60கோடிக்கான ஒப்பந்த நகல் கிடைத்தது. அதாவது திருநெல்வேலியில் செயல்படும் RURAL EDUCATION AND SOCIAL WELFARE TRUST(REST)  நிர்வாக அறங்காவல் கே.ரமேஷ் அப்ரகாம், தூத்துக்குடி குருசடி சந்தில் வசித்து வரும் திருமதி திலகவதி பர்ணான்டேவுக்கு ரூ60கோடி  மருத்துவமனை கட்ட பணம் கொடுத்த ஒப்பந்தம் நகல் மக்கள்செய்திமையத்திற்கு கிடைக்க, அந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலாளர், தமிழக ஆளுநர், உள்துறை செயலாளர், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் அனுப்பிய புகார் மனுவின் விசாரணையே நடத்தவில்லை..

  ரூ60கோடி  நிதி தொடர்பாக விசாரணை நடந்திருந்தால், பல அதிர்ச்சியான உண்மைகள் வெளி வந்திருக்கும். பலர் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்.  அதிமுக அரசின் மூத்த அமைச்சரின் தொடர்பும் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்..

 ஸ்டெர்லை ஆலை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். மக்கள்செய்திமையம் அளித்த புகாரை ஏன் விசாரிக்கவில்லை என்று தமிழக அரசு பதில் சொல்லுமா…                         

 

Comments

comments