ஸ்டெர்லைட் ஆலையை மூட…மக்கள் போராட்டம்..முடங்கியது தூத்துக்குடி… ஸ்டெர்லைட் புரோக்கர் ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ்

 

     தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 70 நாட்கள் மக்கள் போராடி வருகிறார்கள்..9.4.18 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள், திருநெல்வேலி தேசிய நெஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் தூத்துக்குடியே முடங்கியது..

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா பாபு, வழக்கறிஞர் ஜோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அரசியல் கட்சித்தலைவர்கள், சரத்குமார், கமலஹாசன், பிரேமலதா விஜயகாந்த், சிபிஎம் பாலகிருஷ்ணன், ஜி.கே. வாசன் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று  போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்கள்..

 ஸ்டெர்லைட் ஆலையை லைசென்ஸ் புதுப்பிக்கவும், விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கவும், மாநில ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு வழக்கம் போல்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  இருவர் சொல்லுவதை மட்டுமே கேட்டு செயல்படுவார்கள்.. மக்கள் போராட்டத்தைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்…

 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா தடைவிதித்தார். இதனால் ஆலையின் கட்டுமான பணிகளை எல்&டி நிறுவனம் நிறுத்தியது.

 முதல்வர் ஜெயலலிதா, 22.9.16ல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதல்வர் இலாகா, ஒ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டவுடன், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க கட்டுமான பணிகளை தொடங்க, ஒ.பன்னீர்செல்வம் அனுமதி அளித்தார்..

  ஸ்டெர்லைட் ஆலைக்கு மூட வேண்டும் என்று வாயை திறந்தாலே வழக்கு என்று மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் பின்னணி இதோ…

சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வருகிறார். வி.வி மினரலஸ் நிறுவனம் தாது மணல் கடத்தலுக்கு மாமூல் தரவில்லை என்பதால், அரசுக்கு கடிதம் எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியவர்..

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ் குடும்பத்துடன் வந்தார்.. ஸ்டெர்லைட் ஆலையின் உதவி – சேர்மன், ஆசிஸ்குமாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை தலைமைப் பொறியாளரை சந்தித்து பேசிய ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தலுக்கு எப்படி செயல்பட வேண்டும், எப்படி கோப்புகள் போட வேண்டும் என்று விளக்கினார். ஸ்டெர்லைட் ஆலை வைஸ் – சேர்மன் சொன்னப்படி, கோப்புகளில் எழுதப்பட்டது..பண பரிமாற்றங்கள் இனிது முடிந்தவுடன், ஆசிஸ்குமார் ஐ.ஏ.எஸ், திருச்செந்தூர் கோயிலுக்கு முருகனை தரிசித்துவிட்டு டெல்லி புறப்பட்டார்…

மத்திய அமைச்சரவையில் துணை அமைச்சராக இருக்கும் Dr Jitendra singhயிடம் தனிச் செயலாளராக ஆசிஸ் குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வருகிறார்..அமைச்சருக்கே மக்கள்செய்திமையம், ஆசிஸ்குமார் புரோக்கராக செயல்பட்டதுப்பற்றி புகார் அனுப்பி உள்ளது…

  ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை, பூமிக்கு அடியில் செல்வதை படத்தில் பாருங்கள்…இதனால்தான் நிலத்தடி நீர் அதாவது குடி நீர் மாசுப்படுவதற்கு காரணம்…

      ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்துடன்  மக்கள் செய்திமையம்…

Comments

comments