ஸ்டெர்லைட் ஆலையினால்… தூத்துக்குடியில் அதிகரிக்கும்  கேன்சர் நோயாளிகள் ..13கோடிக்கு கேன்சர் மருந்து விநியோகம்

தமிழகத்தில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.. தூத்துக்குடி மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகரிக்க காரணமே ஸ்டெர்லைட் ஆலையினால்தான் என்பதில் சந்தேகம் இல்லை…

 தமிழக அரசின் சுகாதாரத்துறையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கேன்சர் நோயாளிகளுக்காக  2017ம் ஆண்டில் மட்டும் கேன்சருக்கான 21.03 இலட்சம் மாத்திரைகள், ஊசி மருந்துகள் ரூ8.76கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2016ல் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் ரூ5கோடி மதிப்புள்ள கேன்சர் மருந்துகள் ஸ்டாக் இருந்தது. 2015ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் ரூ4கோடி மதிப்புள்ள கேன்சர் மருந்துகள் ஸ்டாக் இருந்தது…

 உதாரணமாக DANAZOL cap 50 mg 2.20 இலட்சம், TAMOXIFEN CITRATE tab 10mg 1.14 இலட்சம், IMATINIB cap 400mg 1.22இலட்சம்  உள்ளிட்ட 35 வகையான மாத்திரைகள், ஊசி மருந்துகள் 2017ம் ஆண்டில் ரூ8.76கோடிக்கு, 21.03 இலட்சம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது..

 கேன்சர் மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள் கொள்முதலை கணக்கீட்டு பார்க்கும் போது, தமிழ்நாட்டில் கேன்சர் நோயாளிகள் சுமார் 50 இலட்சம் பேர் இருப்பதாக தெரிகிறது.

 ஆனால் 2017ம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ13கோடி மதிப்புள்ள கேன்சர் மருந்துகள், மாத்திரைகள் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டு கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது..

 சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்…

 

Comments

comments