வ.உ.சி துறைமுகத்தில் பணி நியமனத்திற்கு பல இலட்சம் வசூல்- அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புலம்பல்..

இந்தியாவில் உள்ள பெரிய மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகமாக உள்ள  துறைமுகங்களில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி.துறைமுகம் முன்னிலையில் உள்ளது.  மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு பல்லாயிரகணக்கான கோடி ரூபாய் வருவாய் வந்துக் கொண்டிருக்கிறது.

   இந்த நிலையில் சில வருடங்களாகவே வ.உ.சி துறைமுகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு துறைமுகத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு ஆங்கிலம், வேதியில், இயற்பியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் இரண்டு பெண், ஒரு ஆண் ஆசிரியர்கள்  நியமிக்கப்படடார்கள் .  இதில் ஆங்கில ஆசிரியர் சரவணன் திறந்தவெளி பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு படித்துள்ளார்.  இதனால் சரவணனுக்கு தகுதி இல்லை என்பதுதான் உண்மை. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள், பணி நியமனம் செய்யக்கூடாது,  பதவி உயர்வு தரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துல்ளது.  மூன்று ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு ஒவ்வொருவரும் தலா  ரூ25 இலட்சம் இலஞ்சம் கொடுத்துள்ளார்கள். இலஞ்சம் கொடுத்து பணி நியமனம் பெற்றும் கடந்த 1 ½  வருடமாக சம்பளம்  வழங்கவில்லை.

   துறைமுக ஆபிஸ் கிளார்க் வெங்கடாசலம் நான் சம்பளம் பெற்றுத் தருகிறேன் என்று மூன்று பேரிடமும்  தலா ரூ.50,000/- வசூல் செய்துவிட்டார்.  மேலும், துறைமுக போக்குவரத்துக்கழக இணைச்செயலாளராக இருக்கும்  ராமசாமி பள்ளிச் செயலாளராகவும் இருப்பதால், போக்குவரத்து சரி வர கவனிப்பதும் கிடையாது.  துறைமுக துணை சேர்மனாக இருக்கும் வையாபுரியை  அழைத்த  மத்திய கப்பல்துறை இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டு பதவிக்கு மூன்று பேருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார்.  துணை சேர்மன் வையாபுரி மூன்று பேருக்கும் தகுதி இல்லை என்று கூறி மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய பரிந்துரை கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், பரிந்துரை கடிதம் பெற்றவர்கள் அலைந்துக்கொண்டு இருக்கிறார்கள்.. அமைச்சரும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். தகுதி இருப்பவர்களுக்கு அமைச்சர்  பரிந்துரை கடிதம் கொடுத்தால், அதிகாரிகள் செய்வார்கள்.. தகுதி இல்லாத நபர்களுக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தால், அதிகாரிகள் எப்படி பணி நியமனம் செய்வார்கள்..

    இந்த நிலையில் துறைமுகத்தில் ஏழு கிளாக் பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு கடந்த  மாதம் 27ம் தேதி அதற்கான ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இந்த நவம்பர் மாதம் 1ம் தேதி ரிசல்ட் வ.உ.சி துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், துறைமுக சேர்மன் ஒரு மாதம் ஆகியும் ரிசல்ட்டை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

   இந்த ஏழு பதவிக்கும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் 20 பேர் பரிந்துரை  கடிதம் பெற்றுள்ளார்கள்.  மேலும் பணிநியமனம் பெற்று தருவதாக பலபேரிடம் பல இலட்சம் ரூபாய் வசூலும் நடந்துள்ளது.

   கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வ.உ.சி துறைமுகத்திற்கு பல பதவி நியமனம் கான்ட்ராக்ட் உள்ளிட்ட பல பணிகளுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே அதற்கான அனுமதி வழங்கும் சுழ்நிலை உள்ளது. தற்போதைய துணை சேர்மன் வையாபுரி எந்த புகாரில் சிக்காமல் நேர்மையாக நடந்து வருகிறார்.  எந்த வித அனுமதிக்கடிதம் வந்தாலும் சட்டத்திட்டத்திற்குட்பட்டுதான் பணிகளை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆனால் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நான் சிபாரிசு செய்தவர்களுக்கு பணி நியமனம் செய்யவில்லையா, அமைச்சர் பதவிக்கு மதிப்பு இல்லையா  என்று புலம்பி வருகிறார்..

தகுதி இல்லாத நபருக்கு பரிந்துரை செய்தால்..இந்த நிலைதான் ஏற்படும்…அமைச்சருக்கு புரிந்தால் சரி…

 

 

Comments

comments