விழுப்புரம்… விழுப்புரம்… மின்சாரவாரியமா..பலான வாரியமா-தங்கவேலு அண்ணாச்சிக்கு என்னாச்சு..

விழுப்புரம் மாவட்டம் மின்சாரவாரியத்தின் தலைமை பொறியாளர் தங்கவேலுவை, மன்மதன் என்று அன்பாக அழைப்பார்களாம்… கண்காணிப்பு பொறியாளர் சீனிவாசன், விழுப்புரம் செயற் பொறியாளர் சைமன் மூவர் கூட்டணி போடும் ஆட்டம் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறது..ஆல் இன் ஆல் டிரைவர் அணில்குமார் தான் நிழல் தலைமை பொறியாளராம்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் களத் தொழிலாளர் சங்கம், பாரதீய மின் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களின் தகவல் பலகையில் ரோஜாவைப்பற்றி துண்டு செய்தி ஒட்டப்பட்டுள்ளது..

பதவி உயர்வில் சுய விருப்பத்தின் பேரில்  கடலூர் வட்டம் சென்ற ரோஜா, மீண்டும் விழுப்புரம் மண்டல அலுவலகம் வந்த பின்னணி என்ன… ரோஜா நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வாராம்…விழுப்புரம் மின்சாரவாரிய அலுவலகத்தில்…அதனால் கீழ் உள்ள அதிகாரிகள் ரோஜாவுக்கு சலாம் போடுவதை தவிர வேறு வழியில்லை..

ஓஷன் ஸ்ப்ரே  சொகுசு ஆடம்பர ஹோட்டல்  பாண்டி ஈ.சி.ஆர் சாலையில் அனுமந்தை மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்ப்பட்ட எல்லையில் உள்ளது.. இந்த ஹோட்டலில் தென் மாநில மின்வாரிய கூட்டம் இயக்குநர் ஹெலன் தலைமையில் நடந்தது..

தலைமை பொறியாளர் தங்கவேலு அய்யா, இந்த சொகுசு ஹோட்டலில் அடிக்கடி தங்குவார். இப்படி தங்கியிருக்கும் போது மின் தடை  ஏற்பட்டது. உல்லாசமாக இருக்கும் போது மின் தடையா என்று அதிர்ச்சியானார். திண்டிவனத்தில் உள்ள மின்சாரவாரிய ஊழியர்களை அழைத்து முருக்கேரியிலிருந்து மரக்காணம் வழியாக அனுமந்தை வரையில் 33கி.வோல்ட் உயர் மின்னழுத்த பாதையை சரி செய்தார்.. 22 கே.வி பீடரிலிருந்து விழுப்புரத்துக்கு மின்சாரம் வருகிறதோ இல்லையோ…ஒஷன் ஸ்ப்ரே சொகுசு ஹோட்டலுக்கு மின்சார வரும்…அதே போல் ஒஷானிக் பழ ஜூஸ் கம்பெனிக்கு மின் தடை வராதாம்…பழ ஜூஸ் கம்பெனிக்கு 2 எச்.டி மின் இணைப்பு உள்ளது. முருக்கேறி -மரக்காணம்- அனுமந்தை வரை மின் பாதையில் மரங்களை வெட்டி, மின்சாரம் விரைவாக, சீராக வர இரவு பகலாக பணியாற்றினார்கள்.. பாவம் ஊழியர்கள்…

வாக்கு அளித்த மக்களுக்கு, மின்சாரம் சீராக கிடைக்க வழி செய்யவில்லை. பணம் காய்ச்சி மரமான ஜூஸ் கம்பெனிக்கும், உள்லாச ஹோட்டலுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்க வழி செய்கிறார் தலைமை பொறியாளர் தங்கவேலு..

ஓக்கி புயல் நிவாரணப்பணிக்கு இரவும், பகலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை…

பாவம்…விழுப்புரம் மண்டல மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் சொகுசு ஹோட்டலுக்கு அலைந்து, அலைந்து செருப்பு தேய்ந்து போய்விட்டதாம்…

Comments

comments