வாஜ்பாய் அரசை கவிழ்த்தது ஜெயலலிதா.. மோடிக்கு தெரியாதா..மறந்துவிட்டாரா..திமுக அரசை கலைக்க ஜெ நெருக்கடி…

1998 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கோவையில் அத்வானி கலந்துக்கொண்ட போது, குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடிப்பில் 50 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த  திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக 182 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் அதிமுக 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது.

  வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் போதேம், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயாலலிதா, சுப்ரமணியசாமிக்கு நிதியமைச்சர் பதவி, வாழப்பாடி ராமமூர்த்திக்கு சட்டமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார்.

 அதிமுக சார்பில் தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா  இருவருக்கும் மத்தியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

 பிரதமர் வாஜ்பாயிடம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா நெருக்கடி கொடுத்தார்.  ஆனால் வாஜ்பாய் திமுக ஆட்சியை கலைக்க மறுத்துவிட்டார். அதனால் 14மாதங்கள் கழித்து திமுக ஆட்சியை 356 பிரிவின் கலைக்க மறுத்த காரணத்தால் 1999ல் வாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்றுக்கொண்டார்.  அதிமுக அமைச்சர்கள் பதவி விலகினார்கள்.  இதனை தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதனை தொடர்ந்து 1999ல் பாஜக கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது.

 வாஜ்பாய் கவிழ்ந்ததும், கடற்படைத் தளபதி விஷ்ணு பகவத் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான காரணத்தை கூட்டணிக் கட்சியான எங்களுக்குச் சொல்லவில்லை என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டார்.

 கிளாம்பாக்கத்தில் மக்களவைத்தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில்  356ஐ பயன்படுத்தி 50 தடவை மாநில அரசுகளை காங்கிரசு கலைத்துள்ளது என்று பேசிய பிரதமர் மோடிக்கு வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக அரசை கவிழ்த்தது  ஜெயலலிதா என்பது தெரியாதா அல்லது மறந்துவிட்டாரா…அதிமுக கூட்டணி கட்சி என்பதால் பாஜக அரசு கவிழ்க்கப்பட்ட கதையை சொல்லவில்லையோ…

 

Comments

comments

About Anbu Admin

Check Also

மத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். …

Leave a Reply

Your email address will not be published.