வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை ஆக்ரமித்த 2.28 ஏக்கர் அரசு நிலம் – அடிமாட்டு விலைக்கு விற்க முயற்சி

 

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் இராமாபுரம் கிராமம் சர்வே எண்.134/1 ல் 2.28 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. இந்த நிலம் 3.3.95ல் வீட்டு வசதி வாரியத்தால் சுவாதீனம் பெற்ற நிலமாகும். இராமாபுரம் தற்போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 இராமாபுரம் 2.28ஏக்கர்  நிலத்தை வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை ஆக்ரமித்து, கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது. இந்த நிலத்தை 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை இயக்குநராக இருந்த ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், ராசாராம் ஐ.ஏ.எஸ், ராமையா ஐ.ஏ.எஸ், காமராஜ் ஐ.ஏ.எஸ் இருக்கும் போது சந்தை விலைக்கு வள்ளியம்மை அறக்கட்டளைக்கு விற்றுவிடலாம் என்று வாரியத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுத்தார்கள். ஆனால் வீட்டு வசதி வாரியத்துறை செயலாளர் செல்லமுத்து ஐ.ஏ.எஸ், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை. ஆக்ரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்த உத்தரவிட்டார்கள்.

 வள்ளியம்மை அறக்கட்டளை 2010 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு(ரிட் எண்.5173/10) தொடர்ந்தது. இந்த வழக்கு 25.2.14க்கு பிறகு விசாரணைக்கே வரவில்லை..வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாகம், இந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

  வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை என்பது எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் அதாவது  கல்வி வள்ளல் பச்சமுத்து அய்யாவுக்கு சொந்துமானது..இந்த நிலத்தின் மதிப்பு ரூ100கோடியை தாண்டும்.

  வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை நிறுவனம், ஆக்ரமித்த வீட்டு வசதி வாரியத்தின் இடத்தில் பல லட்சம் சதுர அடியில் அடுக்குமாடி கட்டிடம் கட்டி, கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறது..

  வீட்டு வசதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திடம், ஆக்ரமிக்கப்பட்ட வீட்டு வசதி வாரிய நிலம் 2.28ஏக்கரை, வள்ளியம்மை கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பச்சமுத்து, இராமச்சந்திரா மருத்துவமனைக்கு திருவான்மியூர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றது போல, வள்ளியம்மை அறக்கட்டளை கொடுத்துவிடும் படி பேச்சுவார்த்தை நடக்கிறது..

 முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, நிலத்தை மீட்க உத்தரவிட்டார். ஆனால் முதல்வரின் செயலாளராக ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், நிலத்தை மீட்க, முதல்வர் உத்தரவிட்ட கோப்பை முடக்கிவிட்டார்..

 பார்ப்போம் …தற்போது என்ன நடக்கிறது..என்று..அது..சரி… ராமச்சந்திரா மருத்துவமனை நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டார்கள் என்று அறிக்கை கொடுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை கொடுப்பாரா?

 

Comments

comments