வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் – தொழிலாளர்களுக்கு ரூ2000/- விண்ணப்படிவம் குப்பைக் கூடையில்..கணினி மையங்களில் அட்டூழியம்

மக்களவைத் தேர்தலுக்காக ஆளும் அதிமுக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைகளுக்கு குறிப்பாக ஏழை தொழிலாளர்கள் 60 இலட்சம் பேருக்கு ரூ2000 கொடுப்பதாக அறிவித்தது. உண்மையில் 28 பேர் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள்.. ஆனால் 60 இலட்சம் பேர் என்று அரசு அறிவித்த காரணத்தால்  இதற்கான விண்ணப்பம் படிவம் நகராட்சியில், வருவாய் அலுவலகங்களிலும் கிடைக்கிறது. விண்ணப்படிவங்களை புரோக்கர் கும்பல் பூர்த்தி செய்து கொடுக்க, ரூ100 வசூல் செய்கிறார்கள்..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களில் உள்ள புள்ளி விவரங்களை  தனியார் கணனி மையங்களில், டைப் செய்ய கொடுத்துள்ளார்கள்.. தனியார் கணினி மையங்களில் நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வளவு விண்ணப்பம் கொடுத்தோம் என்று கணக்கீடாமல், கட்டுக் கட்டாக கொடுத்துவிட்டார்கள்..

அதனால் கணினி மையங்களில் டைப் செய்பவர்கள், டேபிளை துடைக்க, சாப்பிட்ட இடத்தை துடைக்க,  டீ குடித்தவுடன் கைத்துடைக்க, இந்த விண்ணப்பங்களை பயன்படுத்திவிட்டு, குப்பைக் கூடையில் போட்டுவிடுகிறார்கள்..

பாவம்.. ஏழைகள்.. தனக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகளிடம் கொடுத்த விண்ணப்பம் கைதுடைத்துவிட்டு குப்பைக் கூடையில் கிடக்கிறது.. இந்த நிலை தமிழகம் முழுவதும் நடக்கிறது.

அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்ட போது, தனியார் கணினி மையங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை கொடுக்கவில்லை என்று பதில் சொன்னார்கள்..

இதோ.. தூத்துக்குடியில் தனியார் கணினி மையங்களில் விண்ணப்படிவம், டைப் செய்யப்படும் புகைப்படத்தை பாருங்கள்..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை கொடுத்த ஏழை மக்களுக்கு, ரூ2000 கிடைக்கவில்லை என்றால் அதிகாரிகள் கதி அதோ கதி தான்…

 

 

Comments

comments