வருமான வரித்துறை ரெய்டு- சிக்கிய SPK construction – சுப்ரமணியன் பழனிச்சாமி யார்…ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் காப்பாற்றப்பட்டாரா?

 

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியதை தொடர்ந்து அருப்புக்கோட்டையை சேர்ந்த SPK construction உரிமையாளர் செய்யாதுரை, நாகராஜன் செய்யாதுரை மற்றும் சலீம், ஜோஸ், சப் –காண்டிராக்டர் நொளம்பூர் தியாகராசன் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது. இந்த ரெய்டில் ரூ160 கோடி பணம், 100கிலோவுக்கு அதிகமாக தங்க கட்டிகள், பினாமி ஆவணங்கள் சிக்கியுள்ளது..

 செய்யாதுரை அதிமுகவின் கமுதி ஒன்றிய செயலாளர். அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடன் கூட்டணி அமைத்து எஸ்.ஆர்&கோ என்று நிறுவனம் தொடங்கி, சின்ன அரசு பணிகளை செய்து வந்தார்..2011ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் எஸ்.ஆர் &கோவிலிருந்துவ் விலகி, நெஞ்சாலைத்துறையில் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்தார். செய்யாதுரையின் மகன் நாகராஜனின் கண் இசைவுக்காக நெஞ்சாலைத்துறை அதிகாரிகள் இரவு பகலாக தவம் கிடைந்தார்கள்..

  முதல்வர், துணை முதல்வர்களின் மகன்கள், முதல்வரின் நெருங்கிய உறவினர்களுடன் கூட்டணி அமைத்து அசுரவளர்ச்சியை எட்டினார்..அமைச்சர்களின் மகன்கள், உறவினர்களைவிட நெஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் உடன் நாகராஜன் மிகவும் நெருக்கமாக இருந்தார்..

நாகராஜன் Sri Balaji Tollways (madurai) Private Limited நிறுவனத்தை தொடங்கும் போது சுப்ரமணியன் பழனிச்சாமி  50 சதவிகித பங்கை கொடுத்தார். மதுரை கப்பலூர் டோல்வோவை டெண்டர் எடுத்தார்.. Spkandco Exprressway Private Limited’s நிறுவனத்தில் சுப்ரமணியன் பழனிச்சாமி, நாகராஜன் இருவரும் மட்டும் தொடங்கினார்கள்..

 சுப்ரமணியன் பழனிச்சாமி, பவானி, சத்தியமங்கலம், ஈரோடு ஆகிய நகரங்களில் செயல்படும் . Sri Andal Paper Mills Private Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்..முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கி உறவினர்..

 நாகராஜன் செய்யாதுரை, சுப்ரமணியன் பழனிச்சாமி இருவர் கூட்டணியில் செயல்படும் நிறுவனங்களின் சின்ன பட்டியல்…

 SPKANDCO EXPRRESSWAY PRIVATE LIMITED
PANDIANADU AGRO FARMS LIMITED
SRI KULANDHAI VELAN CHITS PRIVATE LIMITED
PGI ASSET PROMOTERS LIMITED
YOGI TRANS INDIA PRIVATE LIMITED
SRI CHAKKARA ASSET PROMOTER PRIVATE LIMITED
MOONGILANAI NIDHI LIMITED
SEEDS FARMERS PRODUCER COMPANY LIMITED
SRI SATHU TRANSPORTS PVT LTD

 

நெஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ் உடன் நாகராஜன் நெருக்கமாக இருந்த காரணத்தால் 21.7.15ல் ராமநாதபுரம் நெஞ்சாலைத்துறை சாலைகள், உள்ளூர் சாலைகள் 5ஆண்டுகள் வரை பராமரிக்க ரூ479.98 கோடி ஒதுக்கீடு செய்து, அந்த பணியை எஸ்.பி.கே கன்ஸ்டிரக்சனிடன் கொடுத்தார். அதே போல்  செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ680கோடிக்கான  டெண்டர் முழுவதையும் ராஜீவ்ரஞ்சன் ஐ.ஏ.எஸ் எஸ்.பி.கே கன்ஸ்டிரக்சனுக்கு தாரை வார்த்தார்..

 ஆனால் வருமான வரித்துறை ரெய்டில் ராஜீவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ் காப்பாற்றியது யார்?

நாளை பார்க்கலாம்..

 

 

 

 

 

Comments

comments