வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய அமைச்சரின் உதவியாளர் சரவணன் மீது சொத்து குவிப்பு வழக்கு… சபேசன் வாக்குமூலத்தில் சிக்கிய சரவணன்

வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த அதிரடி ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. விசாரணையின் செல்போன் சிணுங்கியது. செல்போனில் அமைச்சரின்  நிழல் உதவியாளர் சரவணன்  செல்போனில் வந்தார். சபேசன் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தெரியாமல் உளறிக் கொட்டினார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு காரில் ஏற்றும் போது சபேசன் மயங்கி விழுந்துவிட்டார்.

 அடுத்த சில நிமிடங்களில் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனின் ஆர்.ஏ.புரம் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்த போது, சரவணன் ரூ7 இலட்சம் இலஞ்சம் வாங்கிகொண்டு இருந்தார். சரவணன் வீட்டில் ரூ70இலட்சமும், இலஞ்சம் வாங்கிய தொகை ரூ 7இலட்சத்தையும் சேர்த்து  மொத்தம் ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ரூ7 இலஞ்சம் கொடுத்தவர் மீது வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் ரூ7 இலட்சம் இலஞ்சம் , அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனிடம் கொடுத்தவர் யார் என்ற விவரங்கள் மக்கள்செய்திமையத்துக்கு தெரியும். விரைவில் வெளியிடப்படும்.

 அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனின் ஆர்.ஏ.புரம் வீட்டில் ரூ77இலட்சம் ரெய்டில் சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை  தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 வருமான வரித்துறையின் கடிதத்தின் பேரில், அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

 தமிழக அரசு நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கும், கோவை மாநகராட்சி ஆணையருக்கும் கடிதம் அனுப்பி 10 நாட்களாகியும் இது வரை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

 DO WELL ASSOCIATES உரிமையாளர் சபேசன் மீது எடுத்த நடவடிக்கையை வருமான வரித்துறை வெளியிடுமா…

Comments

comments