வருமானவரித்துறை & சிபிஐ ரெய்டுகள்-எனக்கு கவலையில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர் புலம்பல்…

MDM குட்கா மாதவராவிடம் மாமூல் வாங்கிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிபிஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ், முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்தியது..

  இதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஐ.பி.எஸ்யை டிஜிபி பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 தலைமைச் செயலாளராக ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் இருந்த போது, ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் வீடு, அவரது மகன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது தலைமைச் செயலகத்தில், தலைமைச்செயலாளர் அறையில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.  உடனடியாக தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டார்..

 டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி அறையில் சிபிஐ ரெய்டு நடந்த பிறகும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஐ.பி.எஸ், டிஜிபி பதவியிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

 அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறை, அமுலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தி, பல மாதங்களாகியும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை ஒண்ணும் பண்ண முடியாது, ரெய்டுகள் பற்றி கவலையில்லை என்று வெளிப்படையாக தன் ஆதரவாளர்கள், சக அமைச்சர்களிடம் கூறியுள்ளார்..

 நெஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் செய்யாதுரை வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு என்னாச்சு என்ற மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள்..

 தமிழ்நாட்டில் நடக்கும்  வருமானவரித்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்..

 

 

                                            

 

Comments

comments