வட சென்னை அனல் மின் நிலையம்.. எரியும் நிலக்கரி கோடிக்கணக்கில் நட்டம்..ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மறுப்பு..

வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பராமரிப்புபணியை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் சரி வர செய்யாத காரணத்தால் நிலக்கரி எரிகிறது, இதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது என்ற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

 28.2.19ம் தேதி  ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நம்மிடம் தொடர்புக்கொண்டு நாங்கள் பராமரிப்பு செய்யும் இடங்களில் நிலக்கரி எரியவில்லை. தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்தார். வட சென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த பணிகளை கவனிக்கும் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பொறியாளர், முறையாக, நிலக்கரி எரியாதபடி பராமரிப்பு பணிகளுக்கான புகைப்படங்களை அனுப்பி வைத்தார்..

 நாம் புகைப்படங்கள் அனுப்பிய பொறியாளருக்கு, நம்மிடம் உள்ள வீடியோ அனுப்பி விளக்கம் கேட்டோம்..நிலக்கரி எரியும் இடங்கள் வட சென்னை அனல் மின் நிலையத்தில்  ICHS பகுதி, இந்த பகுதியில் நிலக்கரி பராமரிப்பு பணிகளை திருவொற்றியூரை சேர்ந்த அருண் இன்ஜினியரிங் நிறுவனம் செய்து வருகிறது என்று கூறினார்.

 வட சென்னை அனல் மின் நிலையத்தின் கண்காணிப்பு பொறியாளர்களிடம் இது தொடர்பாக கேட்ட போது, நிலக்கரி எரியும் வீடியோக்களில் உள்ள பகுதி ICHS பகுதி, அந்த இடங்களில் அருண் இன்ஜினியரிங் நிறுவனம்தான் பராமரிப்பு பணிகளை செய்கிறது என்பதை உறுதி செய்தார்கள்..

 அருண் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிலக்கரி  பராமரிப்பு பணி தொடர்பாக, தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளோம்..

  மக்கள்செய்திமையத்தின் செய்திக்கும் உரிய மறுப்பும், விளக்கமும் அளித்த                                 ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  மக்கள்செய்திமையம் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் நோக்கம்..செய்திகளில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டுவதை வரவேற்கிறோம்..

Comments

comments