
ரூ100கோடி ஊழலில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமான ஆவடி பெரு நகராட்சி, அவசர சட்டம் மூலம் மாநகராட்சியாகிவிட்டது. 2012ம் ஆண்டிலிருந்து 2019 மே மாதம் வரை ஆவடி பெரு நகராட்சியில் பூங்கா பராமரிப்பு ஊழல், தனி நபர் வீடுகளில் கழிப்பிட ஊழல், சாலை போடுவதில் ஊழல், நம்ம டாய்லட் ஊழல், மக்கள் பயன்பாட்டுக்கு வராத அறிஞர் அண்ணா சமுதாய கூடத்துக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பராமரிப்பு பெயரில் பல லட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது. இப்படி ஆவடி பெரு நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் ஊழல் தான்.. கடந்த ஆறு ஆண்டுகளில் போடப்பட்ட போலி பில் மதிப்பு ரூ100கோடி…
18.6.19ம் தேதி குடி நீர் சப்ளை தொடர்பான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக கல்பனா என்பவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார். பத்திரிகையாளர்கள் கல்பனாவிடம் பேட்டி எடுக்கும் போது, சன் டிவி நிருபர் பரத், புதிய தலைமுறை நிருபர் நவீன், மாலை மலர் நிருபர் செந்தில் மூவரும் தாக்கப்பட்டுள்ளார்கள்..
சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி, நீர் பிடிப்பு பகுதிகளில் 500க்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்களுக்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவடி விளிஞ்சியம்பாக்கத்தில் அடையாறு ஆனந்தபவன் செயல்படும் கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாகவும், விதிமுறை மீறலில் உள்ளது.
ஆவடி பெரு நகராட்சியில் 2011 முதல் 2019 ஜனவரி வரை பணியாற்றிய/தொடர்ந்து பணியாற்றும் நகரமைப்பு அதிகாரிகள், நகரமைப்பு ஆய்வாளர்கள் அனைவரும் இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார்கள்.. இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்ற நகரமைப்பு அதிகாரிகள் மீண்டும் ஆவடி மாநகராட்சிக்கு மாறுதல் பெற(பல லட்சம் இலஞ்சம் கொடுக்க, அமைச்சர் அலுவலகத்தில் முகாமிட்டுள்ளார்கள்) மீண்டும் சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்து, உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து வருகிறார்கள்..

சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறை மீறலில் அப்ரூவல் கொடுக்கப்பட்ட 300க்கு மேற்பட்ட கட்டிட அப்ரூவல் கோப்புகள், மறு ஆய்வுக்காக நகராட்சி நிர்வாக ஆணையரகம் எடுத்து சென்றுள்ளது.
ஆவடி பெரு நகராட்சியின் ஊழல்கள் தொடர்பாக மக்கள்செய்திமையம் கொடுத்த ஆறு புகார்களின் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் முதல் கட்ட விசாரணையை முடித்து உள்ளது. ரூ100கோடி ஊழல் நடந்துள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.பாண்டியராஜன் சார்..ஆவடியை மாநகராட்சி மாற்ற நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி.. ஊழல் இல்லாத மாநகராட்சியை ஆவடி செயல்பட ஒத்துழைப்பு கொடுப்பாரா அமைச்சர் மா.பாண்டியராஜன்…