ரிசர்வ் வங்கி ஆளுநர்-சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ்யின்-நில ஒதுக்கீடு ஊழல்

மத்திய அரசில் பொருளாதார விவாகாரத்துறை செயலாளராகவும், வருவாய்த்துறை செயலாளராகவும் பணிற்றிய ஒய்வு பெற்ற சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ் 2006-11 திமுக ஆட்சியில் தொழில் துறை செயலாளராக பணியாற்றினார்.  அப்போது அமெரிக்காவை சேர்ந்த SANMINA INDIA AND SANMINA –SCI நிறுவனத்துக்கு ஒரகடம்த்தில் 100ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதில் விதிமுறை மீறி, சட்டத்துக்கு புறம்பாக நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார் சக்திகந்ததாஸ் ஐ.ஏ.எஸ்

 SANMINA INDIA AND SANMINA நிறுவனத்துக்கு ஒரகடத்தில் ஒரு 100ஏக்கர் 99 வருட குத்தகைக்கு ஒதுக்கீடு செய்தார். விதிமுறைகளை மீறி 99 வருடம் குத்தகை முடிந்தவுடன், மீண்டும் similar terms and conditionல் 99 வருடத்துக்கு குத்தகை நீட்டிக்கொடுக்க வேண்டும் என்று அரசாணையில் சில வரிகளை சேர்த்தார்.

 மேலும் குத்தகை கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ23.50இலட்சம் என, திமுக ஆட்சியில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து, அரசாணை வெளியிடப்பட்டது. தொழில் துறை செயலாளராக இருந்த சக்தி கந்ததாஸ் SANMINA INDIA AND SANMINA நிறுவனம் ஒரு ஏக்கருக்கு ரூ19.50 இலட்சம் செலுத்தினால் போதும், மீதி ரூ4 இலட்சத்தை தமிழக அரசு சிப்காட் நிறுவனத்துக்கு கொடுக்கும் என்று தமிழக அரசுக்கு சாதகமாக இல்லாமல், SANMINA INDIA AND SANMINA நிறுவனத்துக்கு ஆதரவாக அரசாணை வெளியிட்டார்.

 அரசாணை எண்.176ன் படி, SANMINA INDIA AND SANMINA நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் ரூ19.50இலட்சத்துக்கு 100 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ4 இலட்சம் என 100 ஏக்கருக்கு ரூ400 இலட்சம் இழப்பு…

 தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக பணியாற்றிக்கொண்டு, அமெரிக்கா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்ட சக்திகந்ததாஸ், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்..

  ரிசர்வ் வங்கி செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று மக்களே நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்..

 சக்திகந்ததாஸ்யின் நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மக்கள்செய்திமையம் மத்திய விஜிலென்ஸ் ஆணையத்துக்கு புகார் அனுப்பி உள்ளது..

 

 

Comments

comments