ராம்மோகன்ராவ் பினாமி நிறுவனம் – PADMAVATHI HOSPITALITY க்கு டெண்டர் நீட்டிப்பா..அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை..

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைகளில் House keeping/cleaning & security services and supervisors பணிகள் முன்னாள் தலைமைச் செயலாளரும், பிரபலமான அரசியல் கட்சியின் ஆலோசகருமான ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு)யின் பினாமி நிறுவனமான  PADMAVATHY HOSPITALITY AND FACILITIES MANAGEMENT SERVICEக்கு ஆண்டுக்கு ரூ129.86கோடிக்கு டெண்டர், விதிமுறைகளை மீறி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மூன்றாண்டுகளுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது.

 PADMAVATHY HOSPITALITY AND FACILITIES MANAGEMENT SERVICE நிறுவனம் மருத்துவமனைகளில் பணியாளர்களை நியமித்து, பணிகளை சரியாக செய்யவில்லை, என்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன்கள் அரசுக்கு புகார் அனுப்பினார்கள். ஆனால் மாஜி தலைமைச் செயலாளரின் பினாமி நிறுவனம் என்பதாலும்,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன்,  ராம்மோகன்ராவ் நெருக்கமாக இருப்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் பத்மாவதி நிறுவனத்தின் மீது வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

 மூன்றாண்டுகளுக்கான டெண்டர் 30.4.2019ன் உடன் முடிகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டுவிட்டார். புதிய செயலாளர் பீலா ராஜேஷ்தாஸ் ஐ.ஏ.எஸ் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  சுகாதாரத்துறை அமைச்சற் விஜயபாஸ்கருடன், கடந்த சில நாட்களாக ராம்மோகன்ராவ் பேசிவருகிறார். பேரங்கள் நடந்து வருவதாக தெரிகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பணம் தேவைப்படுவதால் பேரத்தில் இழு பறி நீடிக்கிறது.

 மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், டெண்டர் கோரமுடியாது, அதனால் ஒராண்டுக்கு டெண்டரை நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்..

 2016ல் மட்டும் சட்டமன்றத் தேர்தலின் போது, விதிமுறைகளை மீறி, டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தை குப்பையில் போட்டு, பத்மாவதி  நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதே பாணியில் மீண்டு மூன்றாண்டுகளுக்கு டெண்டர் கொடுப்பார்கள் என்று சுகாதாரத்துறையில் நேர்மையான அதிகாரிகள் புலம்புகிறார்…

         ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பராமரிப்பு டெண்டர் மீண்டும் பத்மாவதி நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்களாம்….கடவுளிடமே பேரமா…

 

 

 

                       

 

Comments

comments