ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்- பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றுவேன் ..லைசென்ஸ் சர்வேயர்களிடம்- சி. ராஜேந்திரன் சபதம்…

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் சி.ராஜேந்திரன், சி.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக சப் –டிவிசன், லே அவுட்டுகளுக்கு அனுமதி கொடுத்த முறைகேட்டில் 3.12.18ம் தேதி மாலை நகரமைப்பு ஆய்வாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

 3.12.18ம் தேதி இரவு ஆவடி பெரு நகராட்சி லைசென்ஸ் சர்வேயர்களை அழைத்து பேசும் போது, 15 அப்ரூவல் சி.எம்.டி.ஏ ரத்து செய்ய கடிதம் அனுப்பி உள்ளது. கோயில் பதாகை பாலாஜி நகர், பருத்திப்பட்டு வசந்தம் நகர் விரிவாக்கம், கோயில் பதாகை பெருமாள் கோயில் லே அவுட் உள்ளிட்ட 70 அப்ரூவல் கோப்புகளை ஆய்வு செய்ய வந்த ரமேஷ், ரூத்ரமூர்த்தி இருவருக்கும் பணம் கொடுத்து, காப்பாற்றி விட்டேன்..

 தற்போது 20 அப்ரூவல் கோப்புகளுக்கு என்னிடம் பணம் அட்வான்ஸ் கொடுத்துள்ளீர்கள்.. கவலை வேண்டாம்.. நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியனிடம், ஆணையர் ஜோதிகுமார் மூலம் பேசிவிட்டேன்..பாலசுப்ரமணியனிடம் மீதி பணத்தை கொடுத்து அப்ரூவல் வாங்கிக்கொள்ளுங்கள்..

 நான் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவன், என்னை ஒண்ணும் பண்ண முடியாது.. சி.எம்.டி.ஏ உறுப்பினர் –செயலர் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவரையும் மாற்றிவிட்டு, மீண்டும் ஆவடி பெரு நகராட்சிக்கு வருவேன்..

  பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை மாற்ற, தாம்பரம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னாள் அமைச்சர் வைதிலிங்கம் மூலம் மாற்றிவிடுவதாக உறுதியளித்துள்ளார்.

 சி.எம்.டி.ஏ  ரமேஷ், ரூத்ரமூர்த்தி இருவரிடமும், பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி சிவக்குமார் மூலம் ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ்யை  மாற்ற பேசி வருகிறேன். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்திடம் சொல்லி விரைவில் மாற்றிவிடுவதாக கூறியுள்ளார்கள்..

  பாலசுப்ரமணியன் எனக்கு வேண்டியவர். என்னை போல் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக அனைத்தும் செய்து கொடுப்பார்..

  லைசென்ஸ் சர்வேயர் பலர் வரவில்லை. லைசென்ஸ் சர்வேயர் வாட்ச் அப் குரூப்பில், இந்த ஆடியோ அனுப்புங்கள் என்று ராஜேந்திரன், தான் பேசிய ஆடியோவை அனுப்பினார்.. ஆடியோவில் ஆவடி  நகராட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளோன்.. நீங்கள் நகரமைப்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியனை அணுகுங்கள் என்று பேசியுள்ளார்..

  கடந்த நான்கு  ஆண்டுகளில் ரூ100கோடி சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு சவால் விடுகிறார்..சபதம் செய்கிறார்.. பார்ப்போம்..

 

 

Comments

comments