ராஜேந்திரனை காப்பாற்றிய -பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஆவடியிலிருந்து திருவள்ளூர் மாற்றம்

ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், நகராட்சி அப்ருவல் மற்றும் சி.எம்.டி.ஏ அப்ரூவலில்  சட்டத்துக்கு புறம்பாக அப்ரூவல் கொடுத்த புகாரில், சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து, முறைகேடாக கொடுக்கப்பட்ட அப்ரூவல் கோப்புகளை கைப்பற்றினார்கள். அந்த அப்ரூவல்களை ரத்து செய்ய உத்தரவிட்டார்கள்..    

      கோயில் பதாகையில் பெருமாள் கோயில் நிலம் ஆக்ரமிக்கப்பட்டு போடப்பட்ட MCB லே –அவுட், சப் – டிவிசனின் நடந்த முறைகேடு தொடர்பான கோப்புகளை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ரத்து செய்யாமல், ஆய்வுக்கு வந்த சி.எம்.டி.ஏ அதிகாரிகளை விலை கொடுத்து  ராஜேந்திரன் வாங்கிவிட்டார்..

 இந் நிலையில் ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன்பு, ஆவடி பெரு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். 24.11.18ம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க, நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் எழுதியது.

 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் கடிதத்தை ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மதிக்காமல் ராஜேந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைத்து அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்து, விசாரணை நடத்தாமல், திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். பிரகாஷ் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குள் மாற்றாமல், வெளி மாவட்டத்தில் நகராட்சிக்கு  மாற்றியிருக்கலாம் ஏன்.. செய்யவில்லை..

 ஆவடி பெரு நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் 400க்கு மேற்பட்ட அப்ரூவல்கள், விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் சி.எம்.டி.ஏ உறுப்பினர் –செயலருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆவடி பெரு நகராட்சியில் மூன்றாண்டுகளில் கொடுக்கப்பட்ட அனைத்து அப்ரூவல்களும் ஆய்வு செய்ய, விரைவில்  சிறப்புக்குழு அமைக்கப்பட உள்ளது.

 மக்கள்செய்திமையம், ராஜேந்திரன் ஆவடி பெரு நகராட்சியில் இலஞ்சம் வாங்கிய புகைப்படமே வெளியிட்டுள்ளது.

 ராஜேந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் காப்பாற்றிய மர்மம் என்ன…

      

 

 

Comments

comments