ராஜூ மகாலிங்கம் 420 …. நடிகர் ரஜினிகாந்துக்கு என்னாச்சு…

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்தவுடன், லைக்கா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜூ மகாலிங்கம்  நடிகர் ரஜினிகாந்த் கட்சிக்கு தாவுகிறார் என்று செய்தியை வெளியிட்டோம்..

   லைக்கா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கம், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆன்மீக அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், நற்பனை மன்றத்தின் அகில உலக தலைவராக வலம் வருகிறார். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் கட்சியை இயக்குவதே 420 ராஜூ மகாலிங்கம்தான்..

 ராஜூ மகாலிங்கத்தின் உண்மையான பெயர் ம.நடராசன்…யாருக்காவது தெரியுமா?

 தூய்மையான அரசியலை தர விரும்புவதாக கூறும் ரஜினியின் முக்கிய ஆலோசகர் ராஜூ மகாலிங்கம் சன் டிவி கேரளாவை சேர்ந்த ஒருவர் சீரியல் எடுத்து ஒளிப்பரப்பிக் கொண்டு இருந்தார். அந்த கேரளா தயாரிப்பாளரிடம் மேலாளர் பணியில் சேர்ந்தார். ராஜூ மகாலிங்கம் என்கிற  நடராசனின் மோசடிகளை கண்டு அதிர்ச்சியடைந்த கேரளா தயாரிப்பாளரின் ஆடிட்டர், தயாரிப்பாளரிடம் எடுத்துக் கூறினார். ஆனால் தயாரிப்பாளருக்கும், ஆடிட்டருக்கு கருத்து வேறுபாடு வர, ஆடிட்டர் உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.. கேரளா நிறுவனமும் போண்டியானது…

   ரோஜா கம்பைன்ஸ் காஜாமொகிதீனிடம் மேலாளராகவும், தனி உதவியாளராகவும் பணியாற்றினார். காஜா மொகிதீன் கையெழுத்தை ராஜூ மகாலிங்கமே போட்டு , பல மோசடிகள் செய்தார். இதை தொடர்ந்து பண பிரச்சனையில் காஜாமொகிதீன்  தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பிழைத்துக்கொண்டார். காஜா மொகிதீனிடம் கேட்டால் டன் கணக்கில் நடராசன் என்கிற ராஜூ மகாலிங்கம் கதையை சொல்லுகிறா.

  திமுக தலைவர் கலைஞர் துணைவியார்  ராஜாத்தி அம்மாள் வீட்டில் எடுபிடி மேலாளராக கொஞ்சம் காலம் பணியாற்றினார் ராஜூ மகாலிங்கம்.. ராசன் என்று அன்பாக அழைப்பார்கள். ஆனால் தொடக்கத்திலேயே  ராஜூ மகாலிங்கத்தின் மோசடிகளை பார்த்த, ராஜாத்தி அம்மாள் விரட்டியடித்தார்..

   ராஜாத்தி அம்மாள் வீட்டில் இருக்கும் போது, பழக்கமான முன்னாள் மத்திய அமைச்சர்   டி.ஆர்.பாலுவிடம் சேர்ந்தார். டி.ஆர்.பாலு ஏமாந்த கதை பெரிய கதை. ராஜூ மகாலிங்கம் என்கிற நடராசனை நம்பி , மகாலிங்கத்தின் பெயரிலேயே சில கம்பெனிகளை தொடங்கினார்..பல கோடிகளை இழந்தார். பிறகு சுதாரித்த டி.ஆர்.பாலு  ராஜூ மகாலிங்கத்தை மிரட்டி, விரட்டியடித்தார்.. இந் நிலையில் இண்டர்நெட் மூலம் வெளிநாடுகளுக்கு பேசலாம் என்று  வெக்டோன்   காலிங் கார்ட் நிறுவனத்தை ராஜூ மகாலிங்கம் என்கிற நடராசன் தொடங்கினார்.. அனுமதி பெறாமல் செயல்பட்டதாலும்,  வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டிலிருந்து பல லட்சம் எடுத்துவிட்டதாக சிபிஐ புகார் வந்தது. அந்த புகார்களின்  அடிப்படையில் சிபிஐ[2001-2002] வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளிதான் நடராசன் என்கிற ராஜூ மகாலிங்கம்…   வழக்கு இன்னும் சிபிஐயில் நிலுவையில் இருக்கிறது.. நடராசன் என்ற பெயரை  ராஜூவ் மகாலிங்கம் என்று மாற்றிக்கொண்டு லைக்கா நிறுவனத்தில் சேர்ந்தார். தன்னுடைய மோசடியுடன் கூடிய திறமையால் அதிவேகமாக வளர்ச்சியடைந்து, லைக்கா நிறுவனத்தில் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார்.

 லைக்கா நிறுவனம் ராஜு மகாலிங்கத்தின் பல மோசடிகளை கண்டுபிடித்து, வெளியேற்ற முடிவு எடுத்த நிலையில், ரஜினிகாந்தின் பக்கம் தாவியுள்ளார்..

 ஆன்மீக அரசியல் கட்சியின் தலைவர் நடிகர் ரஜினிகாந்த், ராஜூ மகாலிங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் கட்சி தொடங்கிறார்..

 ராஜூ மகாலிங்கம் மோசடியான நபர் என்று தெரிந்தும் நடிகர் ரஜினிகாந்த், அதிகாரமுள்ள பதவியில் வைத்திருக்கிறார் என்றால் ரஜினிகாந்துக்கு என்னாச்சு என்ற கேள்விதான் எழுந்துள்ளது…

 5.3.18ம் தேதி எம்.ஜி.ஆர் நிகர் நிலைப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம், தன்னுடைய மருத்துவக்கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலை திறந்தார் . வேலப்பன்சாவடியிலிருந்து கோயம்பேடு வரை இரண்டு பக்கமும் அனுமதியில்லாமல் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் ராஜூ மகாலிங்கத்துக்கு தனி பிளக்ஸ் போர்டு பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தது…

 நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக  அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, தன்னுடைய 420 வேலையை தொடங்கிவிட்டார் ராஜு மகாலிங்கம்….

 

Comments

comments