முதுநிலை மேலாளர் ஆனந்தனின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தால் முடங்கி போன தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்

CB01UMANATH_GNM20GN_333527g

தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் நிழல் நிர்வாக இயக்குநர் முதுநிலை மேலாளர் ஆனந்தன், செயல்பாடுகள் பல சர்ச்சைகளையும், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தை பொறுத்தவரை முதுநிலை மேலாளர் ஆனந்த் பெயரை சொன்னால், ஊழல் சக்கரவர்த்தி என்று பதில் சொல்வார்கள்..

 தற்போது நிழல் நிர்வாக இயக்குநர் ஆனந்தன், என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் நிர்வாக இயக்குநர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ் அவர்கள், இயக்குநர் கம் நிதித்துறை இணைச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ் அவர்கள் இருவரும் தலையாட்டுவதுதான் வேடிக்கையாக உள்ளது.

 மாண்புமிகு முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அமைச்சர் பட்ஜெட் அறிவிப்புகளில் கூறப்பட்ட ரூ600 கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் இதுவரை கொள்முதல் செய்யவில்லை. முதுநிலை மேலாளர் ஆனந்தன், முடிவு எடுத்தால் மட்டுமே கொள்முதல் நடக்குமாம். அரசு மருத்துமனைகளில் மருந்து, மாத்திரை இல்லாமல், வாக்களித்த மக்கள் தவிக்கும் அவலத்தை பார்க்கும் போது, வேதனையாக இருக்கும். ஆனால் ஆனந்தன், ரூ600 கோடிக்கு மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் மருந்து நிறுவனங்களுடன் பேரம் நடத்தி வருகிறார் நிழல் இயக்குநர் கம் முதுநிலை மேலாளர் ஆனந்தன்.

MSM -Anandan TNMSCMSM -Anandan TNMSC 2

 தற்போது, இயக்குநர் கம் நிதித்துறை இணைச் செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ் பெயரை அடிக்கடி பயன்படுத்துகிறார் ஆனந்தன்.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மருத்துவசேவைக்கழகம் தொடர்பாக ஏதாவது கேட்டால் கூட, சார் இது தொடர்பாக உமாநாத் ஐ.ஏ.எஸ்யிடம் ஆலோசனை பெற்று அப்ரூவல் வாங்கிவிட்டேன் என்று அலட்சியமாக பதில் சொல்கிறார் ஆனந்தன்..

 சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், 15-20 நாட்களுக்கு முன்பு வீடு மாற்றிய போது, ஆனந்தன் அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்து கொடுத்த காரணத்தால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எதையும் கண்டுகொள்வதில்லை.

 சோலார் கிராபட்ஸ் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் நிழல் நிர்வாக இயக்குநர் கம் முதுநிலை மேலாளர் ஆனந்தன் அறையில் தினமும் உட்கார்ந்து பேரம் பேசுகிறார்கள்..

 NITAPOL INDUSTRIES நிறுவனத்தின் PYRETHRUM கொசுமருந்தை BANGALORE TEST HOUSE ல் ஆய்வு செய்த போது FAILED அறிக்கை வந்திருப்பதாகவும், PYRETHRUM கொசுமருந்துக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யவில்லை என்று நிர்வாக இயக்குநர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ் 14.8.2015ல் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் கடிதம் எழுதி உள்ளார், ஆனால் முதுநிலை மேலாளர் ஆனந்தனும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன் இருவரும் NITAPOL INDUSTRIES நிறுவனத்தின் PYRETHRUM கொசுமருந்தை ஒரு லிட்டர் ரூ993க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உத்தரவிடுகிறார்கள்.. ஆனந்தனை NITAPOL INDUSTRIESன் பிரதிநிதி சேலம் கோபிநாத் அடிக்கடி சந்திக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆனந்தன் கடிதம் கொடுக்கிறார், கொசுவை அழிக்காமல், கொசுவை வளர்க்கும் NITAPOL INDUSTRIES நிறுவனத்தின் PYRETHRUM கொசு மருந்தை கொள்முதல் செய்யப்படுகிறது..

 சுகாதாரத்துறை உயரதிகாரிகள், ஆனந்தன் கட்டுப்பட்டில் இருப்பதால், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்டுகொள்வதில்லை. வாக்களித்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமில்லாத மருந்து, மாத்திரைகளை பெற, அரசு மருத்துவமனைகளில் படிக்கட்டுகளில் காத்திருக்கும் அவலத்தை, சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தால்தான் தெரியும். அரசு மருத்துவமனைகளில், வரிசையில் நின்று மருந்து, மாத்திரைகளை வாங்கி, அதை ஆய்வு செய்து பார்த்தால், தரமில்லாத, மோசமாக இருப்பது வெளிச்சத்துக்கு வரும்..

  முதுநிலை மேலாளர் ஆனந்தன், நான் டிசம்பர் மாதம் ஒய்வு பெற போகிறேன், என்னை ஒண்ணும் பண்ணமுடியாது என்று மிரட்டுகிறார்..

 தமிழ்நாடு சேவைக்கழகத்தில், நிர்வாக இயக்குநர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ், இயக்குநர் கம் நிதித்துறை செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ் இவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி ஊழல் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் முதுநிலை மேலாளர் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது..

makkalseithimaiyam 9.9.15 5pm

 

Comments

comments