முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு-முதலீட்டாளர்கள் ஓட்டம்…

தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நடத்தினார். மாநாடு முடிந்தவுடன் ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று உலக முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட போட்டோவும், முதலீட்டாளர்களின் பட்டியலும் வெளியானது.. ஆனால் முதலீட்டாளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் முதலீடு செய்யாமல் ஒடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..

ரூ2.50 இலட்சம் கோடி முதலீடு எங்கே?

 உதாரணமாக வேளாண்மைத்துறையில் நாஞ்சில் புட் பார்க் பிரைவேட் லிமிட் நிறுவனம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், தேவாலை தாலுகாவில் ரூ150 கோடி முதலீட்டில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் 10.9.2015ல் கையெழுத்தானது.

 அதே போல் DPS அக்ரிடெக் லிமிட் நிறுவனம்   விழுப்புரம் மாவட்டத்தில் ரூ650கோடியில் நீர் வேளாண்மை பண்ணை அமைத்து 62,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் 10.9.2015ல் கையெழுத்தானது.

  இந்த இரண்டு நிறுவனமும் இத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரகம் உறுதி செய்துள்ளது. இதற்கான ஆதாரம் இதோ…

  10.9.2015ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களின்,  முதலீட்டாளர்கள் பலர் தொழில் தொடங்காமல் ஒடிவிட்டார்கள்..

  உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி இனியும் தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்…

 

Comments

comments