முதல்வர் அறையை-சுத்தம் செய்யும் கோவை சிந்து பிரியா நிறுவனம்..சதி .. ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் புலம்பல்..

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறை, பழைய அமைச்சரவை கூடும் அறை, முதல்வர் குறைகேட்கும் சிறப்பு பிரிவு மற்றும் இரண்டாவது தளம், மூன்றாவது தளம் ஆகிய இடங்களை சுத்தம் செய்ய ரூ2.10 இலட்சத்துக்கு கோவையை சேர்ந்த சிந்து பிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது..

   .கருப்பு பட்டியலில் வைக்க வேண்டிய கோவை சிந்து பிரியா நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது..முதல்வர் அறையை, மற்ற அமைச்சர்கள் அறையை வேவு பார்க்கவே கோவை சிந்து பிரியா நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த டெண்டரில் சதி நடந்துள்ளது என்று மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் புலம்புகிறார்..

 முதல்வர் அறை, பழைய அமைச்சரவை கூடும் அறை, முதல்வர் குறைகேட்கும் சிறப்பு பிரிவு மற்றும் இரண்டாவது தளம், மூன்றாவது தளம் ஆகிய இடங்களை சுத்தம் செய்யும் பணியை 2015 ஜூலை முதல் மதுரை கோமதிபுரத்தில் செயல்படும் Neat and clean service மாதம் ரூ1.80 இலட்சத்துக்கு சுத்தம் செய்து வந்தார்கள்.. மூன்றாண்டு காலம் டெண்டர் முடிந்துவிட்டதால், கோவை நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்துள்ளார்கள்.. கொஞ்சம் ரேட் அதிகம்.. கோவை அதிகாரமையத்தில் இருப்பதால் டெண்டர் மாறிவிட்டது..டெண்டர் மாறிவிட்டது.

  மொத்தம் 82,054 சதுர அடி இடத்தை சுத்தம் செய்ய 18 பணியாளர்கள்.. ஒவ்வொரு பணியாளரும் தினமும் 4500சதுர அடி இடத்தை சுத்தம் செய்ய வேண்டுமாம்..ஒரு பணியாளர் ஆண் அல்லது பெண் தினமும் 4500 சதுர அடி சுத்தம் செய்ய முடியுமா? என்று யோசித்து பாருங்கள்..

 கோவை நிறுவனம் சென்னை தலைமைச் செயலகத்தில் எப்படி சுத்தம் செய்யும் பணியை மேற்க்கொள்ள முடியும்…சிந்து பிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் சென்னை முகவரியே இல்லை..

 சிந்து பிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுத்தம் செய்ய, எடுத்த டெண்டரில் பிரச்சனையாகி, உயர்நீதிமன்றம் வரை வழக்கு நடந்தது..

 கருப்பு பட்டியலில் வைக்க வேண்டிய சிந்து பிரியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு, முதல்வர் அறையை சுத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது..

Neat and clean service நிறுவனத்துக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையை சுத்தம் செய்யும், மாதம் ரூ8இலட்சத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.. அது தனிக்கதை…பிறகு பார்க்கலாம்..

 இந்த டெண்டரில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) பினாமி நிறுவனம் பத்மாவதி எண்டர்பிரைசஸ் கலந்து கொண்டது. ஆனால் பத்மாவதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்கவில்லை…இந்த டெண்டரில் சதி நடந்துள்ளது என்று ராம்மோகன்ராவ் புலம்பி வருகிறார்..

 ஆனால் ராம்மோகன்ராவ் புலம்புவதில் உண்மை இருக்குமோ…

 

 

 

 

Comments

comments