முட்டை ஊழல்..முடங்கி போன DVAC- ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நெருக்கடியா?

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் ஜூலை முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. பினாமி நிறுவனங்களின் பெயரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.

  கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்ததில்  ஊழல் நடந்துள்ளதை, மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை ரெய்டுக்கு முன்பாக அதாவது 4.7.18ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம்  புகார் கொடுத்தது. வருமான வரித்துறை ரெய்டு நடந்துக்கொண்டு இருக்கும் போது, மேலும் சில ஆதாரங்களுடன் 9.7.18ல் மற்றொரு புகார் கொடுக்கப்பட்டது.

 ஆனால் இரண்டு புகார்களும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்காமல் முடக்கிவிட்டது..

 24.8.18ல் விவசாய பம்பு செட்டுகளுக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்திற்கு, தமிழக அரசிடமிருந்து மானியம் பெறுவதில் ரூ15,000கோடி முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கொடுக்கப்பட்ட புகார் 28.8.18ல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..

 அதே போல் நெஞ்சாலைத்துறையில் இராமநாதபுரத்தில் நடந்த  ரூ219.71கோடி ஊழல் தொடர்பாக 23.7.18ல் அனுப்பிய புகாரை 16.8.18 தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 Our land engineering works pvt ltdயின் குப்பை ஊழல் புகார் 25.7.18ல் கொடுக்கப்பட்டது. 28.8.18ல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 பேருராட்சி நிர்வாகத்தில் நடந்த Prematix software solutionயின் வரி வசூல் முறைகேடு தொடர்பாக 30.7.18ல் கொடுக்கப்பட்ட புகார் 23.8.18ல் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  ஆனால் 4.7.18 & 9.7.18ல் முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை.. தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்படவும் இல்லை.. ஏன்..ஏன்….

 முட்டை கொள்முதல் ஊழலில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் டாக்டர் சரோஜா, காமராஜ் ஆகியோர்களை ஊழல் தடுப்பு இயக்குநரகம் காப்பாற்ற முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

                                     

Comments

comments