முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ஆதிக்கத்தில் டி.என்.சி.எஸ்.சி … அரவக்குறிச்சியில் ரூ100கோடி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கத்தில்தான் செயல்படுகிறது. 2018ம் ஆண்டில் மட்டும் ரூ2000கோடிக்கு மேல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை சப்ளை செய்து வருகிறார் குமாரசாமி.

  கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திய போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் ரெய்டு நடந்தது. குமாரசாமி ரூ1350கோடி வரி ஏய்ப்பு செய்ததை வருமான வரித்துறை விசாரணையில் ஒத்துக்கொண்டார்.

 ரெய்டு நடந்து ஒராண்டு காலமாகியும், சுதாதேவி ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை. குமாரசாமிதான் சமூக நலத்துறையில் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்கிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலும் குமாரசாமியின் ஆதிக்கம்தான்..

 கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனமான நாச்சுரல் புட் புராடக்ஸ், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் பெயரில் ஒவ்வொரு மாதமும் சராசரி ரூ100கோடிக்கு மேல் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.

19.12.18ம் தேதி மட்டும் நாச்சுரல் புட் புராடக்ஸ் ரூ106,59,52,427/-(ரூ106.59) கோடிக்கு காசோலை எண்.184494 மூலம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட வேடிக்கை கிறிஸ்டி புட்ஸ் பெயரில் 17.12.19ல் ரூ74,88,986/-(ரூ74.88இலட்சம்) காசசோலை எண்.184487 மூலம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

 கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து ஒராண்டு காலமாகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சத்துணவு முட்டை சப்ளையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ500கோடிக்கு ஊழல் நடப்பதை மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து ஒராண்டு காலமாகியும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்யவில்லை..

முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்காக வாக்காளர்களை விலைக்கு வாங்க ரூ100கோடி  செலவு செய்கிறார்..

 தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஊழல் ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும். வாக்காளர்களே விலை போய்விடாதீர்கள்..

Comments

comments