மீண்டும் ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன்- பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி- மிரட்டப்படும் நிறுவனங்கள்…

மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் உட்பட முதல்வருக்கு நெருக்கமானவர்களுக்கு நெஞ்சாலை பணிகளை மட்டும் டெண்டர் விதிமுறைகளை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டதாக  ஆலந்தூர் பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் புகார் கொடுத்தார்.. சென்னை உயர்நீதிமன்றம் நெஞ்சாலைத்துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 இந் நிலையில் ECO restoration and protection of peerkankaranai tank in tammaram taluk of kancheepuram district.  பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணிக்கான டெண்டரில்..

  1. Win sundram construction
  2. CMK projects pvt ltd
  3. Ramalingam construction company pvt ltd ஆகிய மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டது. ஆனால் எல் -1 ஆக ராமலிங்கம் கன்ஸ்டிரக்சன் வரவில்லை. மற்ற இரு நிறுவனங்களை அன்பாக மிரட்டி, ஒரங்கட்டிவிட்டு Ramalingam construction company pvt ltd நிறுவனத்துக்கு பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணி கொடுக்க பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் பாலாறு வடி நில வட்டம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

  Ramalingam construction company pvt ltd நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கும்படி முதல்வரின் செயலாளர் -2 விஜயகுமார் ஐ.ஏ.எஸ் செல்போன் மூலம் கூறியுள்ளதால், நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் டெண்டரில் கலந்துக்கொண்ட மற்ற நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

 சில நாட்களில் எல்-1 ஆக  இல்லாத ராமலிங்கள் கன்ஸ்டிரக்சன் நிறுவனத்துக்கு பீர்க்கன்கரணை ஏரி புனரமைப்பு பணிக்கான டெண்டர் கொடுக்கப்படும்..

 மற்ற இரு நிறுவனங்களும் வேறு வழியில்லாமல் பூம்..பூம்..என்று தலையாட்டிவிடுவார்கள்..

 

 

 

Comments

comments