மாமல்லபுரம் பேரூராட்சி…..பொய்கை குட்டை ரூ20 இலட்சம் ஊழல்

2011 ஜூன் மாதம் முதல் இன்று வரை உள்ளாட்சித்துறையில் பேரூராட்சியில் குளம், குட்டைகளை பராமரிப்பு பெயரில் பல கோடி ஊழல் அரங்கேறியுள்ளது.

 2012-13ல் நபார்டு வங்கி பேரூராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளை பராமரிப்பு செய்ய ஆழப்படுத்த கடன் வழங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் முக்குத்தி அம்மன் குளம் என்ற பெயரில் ரூ20 இலட்சம் சுருட்டப்பட்டது.

 மாமல்லபுரம் பேரூராட்சியில் பொய்கை குட்டை பராமரிப்பு, ஆழப்படுத்த ரூ20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. இந்த பணியை அதிமுக பிரமுகர் வேலாயுதம் டெண்டர் எடுத்தார்… பொய்கை குட்டையிலிருந்து ஒரு மண்வெட்டி மண் கூட அள்ளவில்லை. ஆனால் ரூ20 இலட்சத்துக்கு எம்.புத்தகம் தயார் செய்து, ஸ்வாஹா செய்துவிட்டார்கள்…

 இப்படி குளம், குட்டை பராமரிக்க, ஆழப்படுத்த நபார்டு வங்கி கொடுத்த கடன் முழுவதும் , எந்த பணியும் செய்யாமல்  போலி எம்.புத்தகம் தயாரித்து, பல கோடி ஊழல் நடந்துள்ளது…

 இது தொடர்பாக மக்கள்செய்திமையம், நபார்டு வங்கிக்கும், சிபிஐக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளது…

 

Comments

comments