மயிலை அசோக்குமார் எந்த கட்சி..கோர்ட்டில் எஸ்.வி.சேகருடன்..ராகுல்காந்தி பிறந்த நாளில் பீட்டர் அல்போன்ஸ் உடன்

பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி. சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தமிழக போலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடப்பட்டபோது, தலைமறைவானார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி எழும்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற வந்த போது,  காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மயிலை அசோக்குமார் எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பாக வந்தார்.

    மயிலை அசோக்குமார் கடந்த வருடம் திருட்டு வி.சி.டி. வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதால்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நடிகை குஷ்பு மற்றும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களின் தீவிர ஆதரவாளரான இந்த மயிலை அசோக்குமார் 20.6.18ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி ஆந்திர மகிளா சபா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு, பீட்டர் அல்போன்ஸை வரவழைத்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் உடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.

   அதே போல குஷ்புவிற்கு ஆதரவாக, கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு போட்டியிட காங்கிரஸ் கட்சியில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தவர். இப்படிப்பட்ட  மயிலை அசோக்குமார் தமிழக காவல்துறையால் தேடப்பட்டு வந்த பா.ஜ.க  பிரமுகர் எஸ். வி. சேகருக்கு பாதுகாப்பாக, எழும்பூர் நீதிமன்றம் வந்தது பற்றி குஷ்பு, பீட்டர் அல்போன்ஸ்  என்ன சொல்லப் போகிறார்கள்?

 பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகருடன் வலம் வரும் மயிலை அசோக்குமார், எப்படி பீட்டர் அல்போன்ஸ் உடன் நெருக்கமாக இருக்க முடிகிறது.. பீட்டர் அல்போன்ஸ் இதை எப்படி அனுமதிக்கிறார்… ஒண்ணுமே புரியவில்லையே…

                           பிறகு எப்படி தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி வளரும்…

                        பத்திரிகை நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்…

 

Comments

comments