மத்திய சென்னை தொகுதி..உழைப்பால் உயர்ந்த சாம் பால்- பணத்தால் உயர்ந்த தயாநிதி மாறன்.. மினி சர்வே…

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக களத்தில் இருக்கும் டாக்டர் சாம் பால் மக்களோடு, மக்களாக பழகியவர். சென்னை, புதுச்சேரியில் பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சாம் பால் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது..24மணி நேரமும் எப்போது, மக்கள் சாம்பால் வீட்டு கதவை தட்டலாம்..

  வருமான வரிகளை முறையாக செலுத்தி நேர்மையாக உழைப்பவர் சாம் பால் என்பது மக்களின் கருத்து..

 முன்னாள் மத்தியமைச்சர், சன் டிவி நிர்வாகியுமான தயாநிதிமாறன், இந்தியாவின் பணக்கார பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தயாநிதி மாறனை சந்தித்து, தொகுதி மக்கள் குறைகளை சொல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முரசொலி மாறன், தயாநிதிமாறன் மத்திய சென்னை எம்.பியாக இருந்த போது தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று மக்கள் புலம்பி வருகிறார்..

 டி.டி.வி தினகரன் அணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளராக தேசிய துணைத் தலைவர்  தெஹ்லான் பாகவி களத்தில் உள்ளார். எஸ்.டி.பி.ஐ கட்சி பம்பரமாக சுழன்று பணியாற்றுகிறார்கள்..

  24.3.19ம் தேதி  காலை 7மணி முதல் மாலை 4மணி வரை மத்திய சென்னை மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் நடந்த மினி சர்வேயில் 1245 பேரை சந்தித்தோம்..அதன் முடிவுகள்…

 சாம்பால் – பாமக வேட்பாளர் – 538 வாக்குகள்..

தெஹ்லான் பாகவி – எஸ்.டி.பி.ஐ கட்சி – 389வாக்குகள்..

தயாநிதிமாறன் – திமுக- 318 வாக்குகள்..

 வாக்குபதிவுக்கு 24 நாட்கள் இருக்கும் போது, எடுக்கப்பட்ட மினி சர்வே..வாக்காளர்களை விலைக்கு வாங்கு முன்பு எடுக்கப்பட்ட மினி சர்வே.. அடுத்த சர்வே 1.4.2019ல் எடுக்கப்படும்..

 

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

நாராயணபுரம் ஏரி பராமரிப்பு ஊழல்-துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மீது ஊழல் வழக்கு..

சென்னை அருகே உள்ள பல்லவபுரம் நகராட்சிக்குட்பட்ட நாராயணம்புரம் ஏரி பராமரிப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ15.67கோடியில், ஒரு ரூபாய்க்கு கூட …

Leave a Reply

Your email address will not be published.