மதுரை மாநகராட்சி..TURIP நிதியில் பல கோடி ஊழலை.. சிபிஐ விசாரிக்குமா…

மதுரை மாநகராட்சியில்  2011ம் ஆண்டு முதல் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் நூற்றுக்கணக்கான கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது..பணிகள் முறையாக செய்யாமல், எம்.புத்தகத்தில் செய்யப்பட்டதாக போலியாக பதிவு செய்து, பல கோடி முறைகேடு நடந்துள்ளது.

 2014-15 மற்றும் 2015-16ம் ஆண்டு TURIP நிதியில் போலி எம்.புத்தகம் பதிவு மூலம் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திலும், சிபிஐயிலும் மக்கள்செய்திமையம் புகார் கொடுத்துள்ளது..
  உதாரணமாக ஏப்ரல் 2015ல் அதாவது 21.4.15ல் அருள்ராஜ் என்பவர் பெயரில் renewal of BT roaf & paver block ward no.76,81,87 to 100 வரை என்று ரூ33.97 இலட்சம்…

 21.4.15ல் மீண்டும்  அருள் ராஜ் பெயரில் டூரிப்/12-13 என்று ரூ27.31 இலட்சம். 14.8.15ல் அருள்ராஜ் பெயரில் ரூ25 இலட்சம்.. அருள்ராஜ் பெயரில் 16.9.15ல் 83.50 இலட்சம்…

 சச்சின் கன்ஸ்டிரக்சன் பெயரில் 7.8.15ல் ரூ83.20 இலட்சம்…காமராஜ் பெயரில் 1.7.15ல் ரூ98.19 இலட்சம்…விக்னேஸ் & கோ பெயரில் 21.7.15ல் ரூ78.98 இலட்சம்…

 மீண்டும் காமராஜ் பெயரில் 6.8.15ல் ரூ64.70 இலட்சம்..விக்னேஸ் பெயரில் 6.8.15ல் ரூ37.82 இலட்சம்…

 அருள்ராஜ், சச்சின் கன்ஸ்டிரக்சன், விக்னேஸ் & கோ, காமராஜ்  பெயரில் மட்டும் போடப்பட்டுள்ள பல கோடி போலி பில்களை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டீர்களா….

  இப்படி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒதுக்கீடு செயப்பட்ட பணத்தை போலி பில் மூலம் ஊழல் செய்தால் இனி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்…

 மதுரை மாநகராட்சி மக்களே தூங்காதீர்கள்.. விழித்தெழுங்கள்… அதிகாரிகளின் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்….

               

 

 

Comments

comments