மதுரை மாநகராட்சி -முல்லை பெரியாறு அணையிலிருந்து குடிநீர்- ரூ20 ஆயிரம் கட்டினால்தான் குடிநீர்

ஊழலில் மூழ்கி தவிக்கும் மதுரை மாநகராட்சியின் அதிகாரிகளுக்கு அடுத்த ஜாக்பாட்.. மதுரை மாநகராட்சி  பகுதியில் குடியிருக்கும் மக்களின் குடி நீர் பஞ்சத்தை போக்க, முல்லை பெரியாறு அணையிலிருந்து ரூ1020கோடியில் குடி நீர் கொண்டு வர அரசாணை 23.5.18ல் வெளியிடப்பட்டது..

  மதுரை மாநகராட்சி குடி நீர் திட்டத்துக்கு மத்திய அரசின் பங்கு ரூ336.60கோடி.. மாநில அரசின் பங்கு ரூ204கோடி..ULB பங்கு ரூ479.40கோடி…ஆசிய வளர்ச்சி வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது.. அரசாணை வெளியிட்டு 78 நாட்களாகியும், டெண்டர் கோரப்படவில்லை.. இந்த குடி நீர் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் TUFIDCO சில விதிமுறைகளை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி முல்லை பெரியாறு குடி நீர் திட்டப்பணிகள் முடிந்தவுடன், மதுரை மாநகராட்சி பகுதியில்  குடியிருக்கும் மக்களுக்கு குடி நீர் இணைப்பு ரூ20,000 டெபாசிட் கட்ட வேண்டும். ஆண்டுக்கு குடி நீர் கட்டணம் ரூ1800/- வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் ரூ25,000 டெபாசிட் கட்ட வேண்டும். ஆண்டுக்கு குடி நீர் கட்டணம் ரூ3600/- என்று புதிய கட்டணங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது…

 ரூ1020கோடி குடி நீர் திட்டத்தை இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால் அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து, 78 நாட்களாகியும், எந்த பணியும் தொடங்கவில்லை…

 நல்ல வேளை குடி நீர் திட்டத்தை தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் செயல்படுத்துமாம்.. தனியாரிடம் தாரை வார்க்கவில்லை…மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்…

      

 

 

Comments

comments