மதுரை மாநகராட்சி … ஊழலில் மூழ்கியது ..சம்பளம் கொடுக்க நிதி இல்லை

உள்ளாட்சி அமைப்புகளில் கிராம பஞ்சாய்த்து முதல் மாநகராட்சி வரை ஊழலில் சிக்கி தவிக்கிறது. மதுரை மாநகராட்சி ஊழலிம் மூழ்கிவிட்டது. மதுரை மாநகராட்சிக்கு அயல்பணியில் தலைமை கணக்கு அதிகாரி நியமிக்கப்படுவார். அயல் பணி முடிந்து சொந்த துறைக்கு போகும் போது தலைமை கணக்கு அதிகாரியை ஒப்பந்தகாரர்கள் சந்தித்து பேரம் பேசினார்கள். இதை தொடர்ந்து தலைமை கணக்கு அதிகாரி  பொது நிதியிலிருந்த மொத்த பணத்தை, ஒப்பந்தகாரருக்கு நிலுவையை தொகையை பட்டுவாடா செய்துவிட்டார்.. பொது நிதியில் பணமே இல்லை. மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 5.6.18ம் தேதி வரை சம்பளம் போடவில்லை. மாநகராட்சியில் ஒய்வு பெற்றவர்களுக்கும் பென்சன் கிடைக்கவில்லை..

  மதுரை மாநகராட்சியில் இ பிளான் மென் பொருள் மூலம் வரைபடம் பரிசிலனை செய்து, கொடுக்க VINZA solution pvt ltd நிறுவனத்துக்கு ஒரு வரைப்படத்து ரூ725/- 29.8.13 லிருந்து 31.7.16 வரை கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. 31.7.16ல் புது டெண்டர் கோராமல், 5 சதவிகிதம் உயர்த்தி ஒரு வரைப்படத்துக்கு ரூ761.25 என 1.8.2016 முதல் 31.7.17 வரை நிர்ணயம் செய்யப்பட்டது.  ரூ 761.25 என நிர்ணயம் செய்த கோப்பில் ஆணையராக சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ் 7.4.17ல் தான் கையெழுத்து போட்டார்.. 2.6.17ல் தான் அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31.7.17ல் முடியும் ஒப்பந்தத்திற்கு ஆணையர் கையெழுத்து போடுவது 7.4.17. தீர்மானம் 2.6.17 என்றால் நிர்வாகம்  எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்…31.7.17 பிறகு என்ன நிலை இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.

  மாநகராட்சியில் Working inspector ஆக பணியாற்றிய 24 பேர்  விநாயக மிஷின் கல்லூரியில் பி.இ பட்டம் பெற்றதாக சான்றிதழ் கொடுத்து, உதவி பொறியாளராக பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள்.. விநாயக மிஷின் பொறியியல் பட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் விநாயக மிஷின் பொறியியல் கல்லூரி சான்றிதழ் பெற்ற 24 பேர் தலா இலட்சங்களை இலஞ்சமாக கொடுத்து பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்…போலி சான்றிதழ்களை வைத்து, பதவி உயர்வு கொடுத்த மதுரை மாநகராட்சி ஜனாதிபதி கையால் விருதுதான் வழங்க வேண்டும்..

 மாநகராட்சி பெண் அதிகாரி, பணியில் இருக்கும் போது கர்நாடகாவில் சட்டம் படித்ததாக லா ஆபிசர் பதவி உயர்வு பெற்ற விவகாரம் பெரிதாகிக்கொண்டு இருக்கிறது…

 மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர் ஐ.ஏ.எஸ் எதைப்பற்றி கவலைப்படவில்லை…மதுரை மாநகராட்சி ஊழல்களை தொடர்ந்து பார்க்கலாம்….

Comments

comments