மக்கள்செய்திமையம் மத்திய அரசின் பதிவு பெற்றது.. இந்தியா முழுவதும் கருத்து கணிப்பு…

மக்கள்செய்திமையம்  மத்திய அரசின் Ministry of MICRO,SMALL & MEDIUM ENTERPRISESல் MAKKALSEITHIMAIYAM PUBLICATION பெயரில் பதிவு செய்து (TN 24 E 0031698) செயல்பட்டு வருகிறது. மேலும் MAKKALSEITHIMAIYAM PUBLICATION & NEWS PVT LTD கம்பெனி சட்டத்தின் படி பதிவு செய்யும் பணிகளை ஆடிட்டர் குழுமம் மேற்க்கொண்டு வருகிறது.

 MAKKALSEITHIMAIYAM PUBLICATIONலிருந்து மக்கள்செய்திமையம்.காம் இணையதளம் செயல்படுகிறது. மேலும்  ஊழல் புத்தகங்கள், மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான ஆவணப்படங்கள், ஆதாரங்களுடன் ஊழல் ஆவணப்படங்கள் மற்றும் செய்தி தொடர்பான சிலைடுகள் வெளியிடப்படுகிறது.

 MAKKALSEITHIMAIYAM PUBLICATION அல்லது MAKKALSEITHIMAIYAM.COM பணியாற்றும் நிருபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மக்கள்செய்திமையத்தின் நிருபர்கள் , செய்தி சேகரிக்க செல்லும் போது, அடையாள அட்டையை கேட்டால் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 புலனாய்வு செய்திகள் வெளியிடும் போது, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகள் மட்டுமே இடம் பெற்று வந்தது. மக்கள்செய்திமையம், புலானய்வு செய்தியில் குற்றம் சுமத்தப்படுபவர்களிடம் கருத்து கேட்கும் புதிய நடைமுறையை செயல்படுத்தினோம்.  புதிய நடைமுறையால் பொய் வழக்குகளில் கைது, குண்டர் சட்டமும் பாய்ந்தது. 

  இனி புலனாய்வு செய்தி வெளியாகும் வரை, குற்றம் சுமத்தப்படுபவர்களிடம் கருத்து கேட்பதில்லை என்ற முடிவெடுத்துள்ளோம். மேலும் ஊழல், நிர்வாக சீர்கேடுகள், சட்டத்துக்கு புறம்பாக நடப்பவைகள், கட்டபஞ்சாய்த்து , அரசு அதிகாரிகளின் சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகள் ஆகிய தகவல்களை உரிய அரசின் அமைப்புகளுக்கு ஆதாரங்களுடன் புகார் அளித்துவிட்டு வெளியிட முடிவு செய்துள்ளோம்.. ஆனால் சில அவரச செய்திகளுக்கு புகார் செய்யும்  நடைமுறை பொருந்தாது.

 தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், சிபிஐ  உள்ளிட்ட பல அமைப்புகளிடம் கடந்த ஏழு மாதங்களில் 30க்கு மேற்ப்பட்ட புகார்கள் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டு உள்ளது. மக்கள்செய்திமையம் புகாரின் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது, பாஜகவின் அரசின் செயல்பாடுகள் குறித்தும் கருத்து கணிப்பு எடுக்கும் பணியை மும்பாயில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து மக்கள்செய்திமையம் பப்ளிகேசன் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்..

 கருத்துக்கணிப்பின் முடிவுகள் மக்களவை தொகுதி வாரியாக, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

Comments

comments