மக்கள்செய்திமையம்.காம் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த, நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் கோபிநாத் மீது ஆணையருக்கு புகார் மனு…

பெறுநர்                                                                                                         23.6.18

                திரு ஆணையர் அவர்கள்,

                        சென்னை மாநகர காவல்துறை,

                        வேப்பேரி –சென்னை-7

அய்யா,

             பொருள்: நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபிநாத்தும், அவரது மனைவியும் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியது தொடர்பான புகார்…

      மக்கள்செய்திமையம்.காம் இணையத்தளத்தின் செய்தி சிலைடில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய க்ரைம் பிரிவு உதவி ஆய்வாளர் கோபிநாத், ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் தொல்காப்பியன் இவர்கள் தொடர்பாக வெளியானது.         

   சென்னை தி.நகரை சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் கார் விற்பனை தொழில் செய்து வருகிறார், தனது நண்பர் ஐயப்பன் நுங்கம்பாக்கத்தில் விக்னேஷ்வரா ஆட்டோ கேரேஜ் என்ற பெயரில் கார் பழுது பார்த்து விற்பனை செய்து வருகிறார். ஐயப்பன் என்பவருக்கு வீடு வாங்க கடன் தேவைப்பட்டுள்ளது இதற்காக ஐயப்பன் செந்தில்குமரனிடம் கடனாக ரூ.56 லட்சம் பெற்றார். சரி நண்பன் தானே உதவலாம், திருப்பி தந்து விடுவார் என்ற அபிமானத்தில் பணத்தை தந்துள்ளார். ஆனால் மாத கணக்கில் இப்போ தருகிறேன் அப்போ தருகிறேன் என பணத்தை திருப்பி தராமல் ஐயப்பன் இழுத்தடித்தார்.

 ஒரு கட்டத்தில் நெருக்கடி தாளாத செந்தில்குமரன் வேறு வழியின்றி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புகார் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில்  ஐயப்பன் காவல் நிலையத்தில் செந்தில்குமாரிடம்  மூன்று மாத கால அவகாசம் கேட்டு மூன்று மாதத்திற்குள் தந்து விடுகிறேன் என்று அதிகாரிகள் முன்பு எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்… ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணம் தர முடியாத சூழலில் தன்னிடம் இருந்த 2 ஆடி(AUDI) கார்களை செந்தில்குமரனிடம் கொடுத்து இதை விற்று உனது பணத்தை எடுத்துகொண்டு மீதமுள்ள பணத்தை என்னிடம் தந்துவிடு என செந்தில்குமரனிடம் ஐயப்பன் கூறியுள்ளார்.. 

  ஆனால் அந்த  2 கார்களும் பழுதடைந்த நிலையில் இருக்கும் பொழுதே  ஐயப்பன் யாருக்கும் தெரியாமல் அந்த கார் மீது வெளியில் கடன் வாங்கி இருந்தார் என்பது செந்தில்குமரனுக்கும் தெரியும்… அதை அவர் பழுது செய்து விற்பனைக்கு முயற்சி செய்தார். இந் நிலையில் திடீரென்று நுங்கம்பாக்கம்  உதவி ஆய்வாளர் கோபிநாத் உதவி ஆணையர் அழைத்ததாக கூற  செந்தில்குமரன் உடனே உதவி ஆணையர் தொல்காப்பியன் அவர்களை சந்தித்தார். அப்பொழுதுதான் ஐயப்பன் தன்மீது பொய் புகார் அளித்ததுள்ளார் என்பது செந்தில்குமரனுக்கு புரிந்தது. 

மேலும் உதவி ஆணையராக பொறுப்பில் உள்ள அதிகாரி தீர விசாரிக்காமல் உனக்கு ரூ13 லட்சம் பெற்று தருகிறேன் என்று  பேரம் பேசி வாங்கிட்டு ஒடிடு, கொடுத்த புகாரை  வாபஸ் வாங்கு என செந்தில்குமரனிடம்  மிரட்டல் விடுத்து,  தனக்கு கீழ் உள்ள காவல் ஆய்வாளர்  செந்தில் குமாரைஅழைத்து “இவனிடம் ரூ13 லட்சம் பெற்று கொண்டேன் என எழுதி வாங்கி துரத்தி விடு” என கூற அந்த ஆய்வாளர்கையெழுத்து போடு என்று  செந்தில் குமரனைமிரட்டினார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத செந்தில்குமரன் அங்கிருந்து சென்று விட சிறுது நேரம் கழித்து நுங்கம்பாக்கம் SI கோபிநாத் என்பவர் செந்தில்குமரனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காவல் நிலையம் அருகே உள்ள தேநீர் விடுதிக்கு வரும்படி கூறி பேரம் பேசியுள்ளார்.   ஆனால் இந்த பேரத்தில்  ஐயப்பன் கொடுத்த 2  கார்களின் உரிமையாளர்கள் வேறு ஒருவர் அதனால் காரை திருப்பி கொடு… இல்லை என்றால் ரூ 5லட்சம் தரும்படி கேட்டுள்ளார். மேலும் தனக்கு ஈகா திரையரங்கம் பின்புறம் வீடும், செங்கல்பட்டு அருகே பல கோடி மதிப்பில் பண்ணை வீடும் உள்ளதாகவும் மாதம் வட்டியே ரூ10 லட்சம் தனக்கு வருவதாகவும், இந்த ரூ லட்சம் டீ செலவுக்கு தான் போகும் என்று கூறியதுமட்டுமல்லாமல், இது எனக்கு மட்டும் அல்ல அதிகாரிகளுக்கும் தான் என்று கூறுகிறார். ஆனால் எதற்கும் ஒப்புக் கொள்ளாத நிலையில் செந்தில்குமரன் தனது  அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களை SI கோபிநாத் காவல் சீருடை அணிந்தபடி, அதுவும்  நள்ளிரவில் பூட்டை உடைத்து 2 கார்களையும் தனியார் TOW வண்டியின் மூலம் திருடியுள்ளனர். இதைப்பற்றி கோபிநாத் நம்மிடம் செல்போனில்  உயர் அதிகாரி கூறினால் நள்ளிரவில் கூட பூட்டை உடைத்து திருட காவல் துறைக்கு அனுமதி உண்டு என சட்டம் உள்ளது என்று கூறினார்.

 இந்த செய்திதான் சிலைடில் உள்ளது.  22.6.18ம் தேதி மதியம்  12.20 மணிக்கு உதவி ஆய்வாளர் கோபிநாத் 9498128089 மற்றும் 9094926011 இரண்டு செல்போன் எண்கள் மூலம் 9840831914 என்ற என்னுடை எண்ணுடன் தொடர்புக்கொண்டு கெட்ட வார்த்தைகளால், என்னையும், என் குடும்பத்தை திட்டினார்.. நான் யாரு என்று உனக்கு தெரியாது…மற்ற எஸ்.ஐ மாதிரி கிடையாது.. உன்னை வெட்டி கொலை செய்துவிடுவேன் என்று கொலை வெறியுடன் மிரட்டினார்.

 கோபிநாத் மனைவி 86102762211 மதியம் 12.23, 12.25 மணிக்கு கெட்ட வார்த்தைகளால் திட்டியோடு, என் குடும்பத்தையும் பற்றி கேவலமாக, அருவருக்க தக்க வார்த்தைகளால் திட்டினார். பிறகு கண்டபடி திட்டி வாட்ச் அப் செய்தி அனுப்பினார்.

 22.6.18ம் தேதி இரவு 10.10 மணிக்கு பல செல்போன் எண்களில் தொடர்புக்கொண்டு, உன்னை கொலை செய்துவிடுவேன் என்று உதவி ஆய்வாளர் கோபிநாத்தும், அவரது மனைவியும் மிரட்டினார்கள்.

 கோபிநாத் மனைவி செல்போன் 8610276221 எண் காலர் ஐடியில் vaisa போலீஸ் என்று உள்ளது.  இந்த எண்ணிலிருந்து இரவு முழுவதும் பல முறை தொடர்புக்கொண்டார். அந்த எண் நான் லாக் செய்துவிட்டதால் எடுக்கவில்லை..

 நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் கோபிநாத், எந்திரன் -2 படப்பிடிப்பு டி.பி.ஐ வளாகத்தில் நடந்த போது, ரூ25,000 கேட்டு மிரட்ட, எந்திரன் -2 படத்தின் இயக்குநர் கொடுத்த புகாரின் பேரில், கோபிநாத்துக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அவரது மனைவி இருவராலும் என் உயிருக்கும், என் குடும்பத்தார்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் கோபிநாத், அவரது மனைவி இருவரும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Comments

comments