மக்கள்செய்திமையத்தை – மறக்காத கலைஞர்- மறந்த மு.க.ஸ்டாலின்

மக்கள்செய்திமையம்.காம், தமிழக அரசில் நடக்கும் ஊழல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி ஆதாரங்களை பெற்றும் புத்தகமாக வெளியிட்டு வருகிறது. 14.5.2015ல் தமிழக அரசின் 10,000 கோடி ஊழல்…சிக்கும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற பிளக்ஸ் போர்டு சென்னை விமான நிலையம் அருகே வைத்தது.. 28.10.2015ல் ரூ50,000கோடி ஊழல் புத்தகத்தை வெளியிட்டது..

 30.8.2016ல் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் இருவரையும் முதல்வராக இருந்த ஜெயலலிதா தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்..

  31.8.2016ல் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முகநூலில் மக்கள்செய்திமையம் சார்பில் தமிழக அரசின் ஐம்பதாயிரம் கோடி ஊழல் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..12 அதிகாரிகளில் இரண்டாவதாக இடம் பெற்றிருப்பவர்தான் தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்! என்று கூறியுள்ளார்..

 திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மக்கள்செய்திமையத்தை மறக்கவில்லை. ஆனால் செயல்தலைவர் பொறுப்பிலிருந்து தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மக்கள்செய்திமையத்தை மறந்துவிட்டார்…

Comments

comments