மக்கள்செய்திமையத்தின்-2.91இலட்சம் மக்களை சந்தித்த கருத்துக்கணிப்பு…39 மக்களவை தொகுதிகளின் கருத்துக்கணிப்பு..

டி.டி.வி தினகரன் முந்துகிறார்…மு.க.ஸ்டாலின் திணறுகிறார் என்ற கருத்துக்கணிப்பு வெளியானவுடன், வானூர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி என்னடா கருத்துக்கணிப்பு..கருத்து கணிப்பா.. கருத்துதிணிப்பா… டி.டி.வி.தினகரனிடம் பணம் வாங்கிக்கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடுகிறீர்களா.. பணம் வாங்கிய கையை வெட்டிவிடுவேன் என்று மிரட்டினார்..

 இதே போல் தொடர் மிரட்டல்கள் வந்துக்கொண்டே இருந்தது.. மிரட்டலுக்கு பயப்படும் கோழை பத்திரிகையாளர் இல்லை நான்…பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் பத்திரிகையாளன் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்…

 மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான அன்பழகனிடம் ஒரு அமைச்சர் ஊழலை வெளியிடாதே பணம் தருகிறேன் என்று பேரம் பேசினார். அமைச்சர் பேரத்துக்கு  மறுத்து, ஊழலை  வெளியிட்டதால் 23 பொய் வழக்கு, குண்டர் சட்டம் பாய்ந்தது..119 நாட்கள் கோவை தனிமை சிறை.. 18.12.18ல் மீண்டும் வழக்கு.. முன் ஜாமீன் பெற்றுள்ளேன்..

 மக்கள்செய்திமையம் உண்மையை மட்டும் எழுதும்..விலை போகாது.. அதனால்தான் 119 நாள் சிறை…

 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய  இரண்டு தொகுதிகளையும் தவிர 37 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது..

 திமுக கூட்டணி, அம்மா மக்கள்முன்னேற்றக்கழகம்(அமமுக), அதிமுக, பாமக, பாஜக என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு..

 மக்கள்செய்திமையம் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள்..

 1. திருவள்ளூர்(தனி) –அமமுக VS திமுக – திமுக கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல், திமுக வேட்பாளர் நின்றால் திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 2. சென்னை வடக்கு – அதிமுக VS அமமுக – அமமுக வெற்றி வாய்ப்பு..
 3. சென்னை தெற்கு – அதிமுக VS திமுக – இழு பறி..
 4. சென்னை மத்திய – அதிமுக VS திமுக -திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 5. ஸ்ரீபெரும்புதூர் – அதிமுக VS அமமுக VS திமுக – அமுமக வெற்றி பெற வாய்ப்பு..
 6. காஞ்சிபுரம்(தனி) – அதிமுக VS அமமுக VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 7. அரக்கோணம் – அமமுக VS திமுக VS பாமக – இழுபறி
 8. வேலூர் – அதிமுக VS அமமுக VS பாமக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..

9.கிருஷ்ணகிரி – அமமுக  VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..

 1. தருமபுரி – திமுக VS பாமக – பாமக வெற்றி பெற வாய்ப்பு..
 2. திருவண்ணாமலை – அதிமுக VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 3. ஆரணி – அமமுக VS திமுக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 4. விழுப்புரம் (தனி) – அதிமுக VS திமுக VS பாமக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 5. கள்ளக்குறிச்சி – அதிமுக VS திமுக VS அமமுக – இழுபறி
 6. சேலம் – அமமுக VS திமுக VS பாமக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 7. நாமக்கல் – அமமுக VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 8. ஈரோடு – அதிமுக VS திமுக VS அமமுக –இழுபறி
 9. திருப்பூர் – அமமுக VS திமுக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 10. நீலகிரி – திமுக VS அதிமுக – திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு.,.
 11. கோயம்புத்தூர் – அமமுக VS திமுக VS அதிமுக – இழுபறியில் அமமுக வெற்றி பெறும்..
 12. பொள்ளாச்சி – அதிமுக VS திமுக – அதிமுக வெற்றி பெற வாய்ப்பு..
 13. திண்டுக்கல் – திமுக VS அமமுக- திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 14. கரூர் – திமுக VS அமமுக VS அதிமுக – இழுபறியில் திமுக வெற்றி பெறும்
 15. பெரம்பலூர் – அமமுக VS திமுக – அமமுக வெற்றி பெறும்.
 16. கடலூர் – அமமுக VS திமுக VS அதிமுக VS பாமக –இழுபறியில் அமமுக வெற்றி பெறும்.
 17. திருச்சிராப்பளி – அமமுக VS திமுக –திமுக வெற்றி பெறும். ஆனால் காங்கிரசுக்கு கொடுத்தால் இழுபறியாகும்.
 18. சிதம்பரம்(தனி) – திமுக VS அமமுக VS பாமக திமுக கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்தால் அமமுக வெற்றி பெற வாய்ப்பு…
 19. மயிலாடுதுறை – திமுக VS அமமுக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 20. நாகப்பட்டினம்(தனி) – அமமுக VS திமுக இழுபறியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 21. தஞ்சாவூர் – அமமுக VS திமுக –அமமுக வெற்றி பெற வாய்ப்பு.
 22. சிவகங்கை – அமமுக VS திமுக VS அதிமுக – இழுபறியில் அமமுக வெற்றி பெற வாய்ப்பு.
 23. மதுரை – அமமுக VS அதிமுக VS திமுக – இழுபறி…அதிமுக வெற்றி பெறாது.
 24. தேனி –அமமுக VS திமுக VS அதிமுக –அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 25. விருதுநகர் –அமமுக VS திமுக VS அதிமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..

35.இராமநாதபுரம் – அதிமுக VS அமமுக VS – இழுபறியில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு…

 1. தென்காசி(தனி) – அதிமுக VS அமமுக VS அதிமுக –அமமுக வெற்றி பெற வாய்ப்பு..
 2. தூத்துக்குடி – அமமுக VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு..
 3. திருநெல்வேலி – அமமுக VS திமுக – அமமுக வெற்றி பெற வாய்ப்பு..திமுக வேட்பாளரை பொறுத்து முடிவு மாற வாய்ப்பு இருக்கிறது..
 4. கன்னியாகுமரி – பாஜக VS அமமுக VS திமுக – திமுக வெற்றி பெற வாய்ப்பு…பாஜக படுதோல்வி அடையும்..

 

 39 மக்களவை தொகுதிகளில் 234 சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு  – 100 பக்கங்களில் வண்ண கலரில் 10.1.19 வெளியாகும்.. விலை ரூ100/-முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்…

 

 

Comments

comments