மக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD

மக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம் கோடி ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது.

 மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பல ஊழலுக்கான ஆதாரங்களை பெற்று, 15 ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஊழல்களை அம்பலபடுத்தியதால், ஆசிரியர் அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, 119 நாட்கள் கோவையில் தனிமை சிறையில் இருந்தார்.

 18..12.19ம் தேதி மாலை 6மணிக்கு பூந்தமல்லியில் உள்ள என் வீட்டின் அருகே என் மீது  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் மாடுகளால் நான் உயிர் பிழைத்தேன். துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் கொடுத்தும், காவல் துறை அதிகாரிகள் பெயரளவுக்கு விசாரிக்க கூட இல்லை. ஆனால் அந்த பகுதியில் மாடுகள் மேய்க்க பூந்தமல்லி காவல்துறை தடை விதித்துள்ளது. அடுத்த துப்பாக்கி சூட்டில் ஆசிரியர் அன்பழகன் பிழைக்க கூடாது என்ற எண்ணமாக இருக்கலாம்..

 துப்பாக்கி சூடு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

 தற்போது MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD ஆக GOVT OF INDIA MINISTRY OF CORPORATE AFFAIRSல் பதிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக செய்தி நிறுவனத்துக்கு பிரைவேட் லிமிட் கிடைத்துள்ளது.

 MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD பெயரில் இனி ஊழல், நிர்வாக சீர்கேடுகளை ஆதாரங்களுடன்  தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும். மேலும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளை 5 நிமிடம் -10 நிமிடம் ஒடக்கூடிய ஆவணப்படமாக வெளியிட முடிவு செய்துள்ளது.

 MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD இனி ஊழல், நிர்வாக சீர்கேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதிலும்,  அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளிலும் தமிழக மக்களுடன் கைக்கோர்த்து செயல்படும்..

 

 

 

 

Comments

comments