மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ஊழல்..சிபிஐ விசாரிக்குமா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் போலி பில்கள் மூலம் முறைகேடுகள் நடந்து வருகிறது.  திருவண்ணாமலை, நீலகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டு, அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதே போல் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 2016-17, 2017-18 ஆகிய இரு ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கணனி உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்..  இந்த இலட்சணத்தில் இந்த திட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது..

 நீலகிரி மாவட்டத்தில் 2016-17,2017-18 ஆகிய இரு ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடந்த மெகா ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் இல்லை. எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை..

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடந்த ஊழல்களை ஆதாரங்களுடன் சிபிஐ க்கு மக்கள்செய்திமையம் அனுப்பி உள்ளது.  சிபிஐ முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது.

        

Comments

comments