பொள்ளாச்சி..மனித மிருகங்களின் காமவேட்டை..அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்களா?..மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்கள்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வர் கூட்டணிக்கு அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்தார்கள். அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் மட்டும் சிக்கியுள்ளார். இந்த ஐந்து பேர்களுடன் வழக்கை முடிக்க, ஆளும் கட்சியும், காவல்துறை அதிகாரிகளும் முடிவு செய்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது..

   ஹெரான் தான் நால்வர் கும்பலை பின்னணியிலிருந்து இயக்கியது. அடுத்து கல்யாணி என்கிற கல்யாணசுந்தரம் காவல்துறை உயரதிகாரிகளுக்கு நெருக்கமானவர்.. பொள்ளாச்சி புதியதாக மாறுதல் பெற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் முக்கிய பிரமுகர் கல்யாணி..

 பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள்ஜேம்ஸ்ராஜா,வசந்த் இவர்கள் பின்னணியில் இருக்கும் தைரியத்தில்தான் காமவேட்டை கடந்த ஏழு வருடங்களாக நடத்தினார்கள்.. ஆனால் பாலியியல் விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் அரசியல் பிரமுகர்களை காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.. சிபிசிஐடி அதிகாரிகள்  கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா, வசந்த், ஹெரான், கல்யாணியை விசாரிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

 பொள்ளாச்சி பாலியியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மேதகு ஆளுநர் அவர்களுக்கு மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் மனு அனுப்பி உள்ளது.

இந்த செய்தி வெளியானவுடன், பொள்ளாச்சி அதிர தொடங்கியது.. முன்னாள் நகராட்சி த் தலைவர் கிருஷ்ணகுமார், ஜேம்ஸ் ராஜா, வசந்த், ஹெரான், கல்யாணி ஐந்து பேரும் மக்கள்செய்திமையத்தின் ஆசிரியரை மிரட்ட முடிவெடுத்தார்கள்..

70102 23203 என்ற எண்ணிலிருந்து தொடர்புக்கொண்ட நபர் கொஞ்சம் அன்பாக மிரட்டினார். அவதூறு வழக்கு போடப்போகிறேன் என்றார். உங்கள் பெயர் என்ன என்று கேட்ட போது, சொல்ல மறுத்துவிட்டார். சம்மன் வரும் அப்போது பெயர் தெரிந்துகொள்ளவும் என்றார்..

 சென்னையில் இருப்பதாக சதிஷ் என்று 9842123203 என்ற எண்ணிலிருந்து சுமார் 10 நிமிடம் பேசினார்.  கல்யாணி பற்றி வெளியிட்ட செய்தி தவறு என்று வாதம் செய்தார்.. சரியுங்கள்.. உங்கள் பக்கள் உள்ள மறுப்பை அனுப்புங்கள் என்றோம்.. ஆனால் மறுப்பு விளக்கம் அனுப்பவில்லை..

                  இரண்டு செல்போன் எண்களின்  கடைசி ஐந்து எண்.23203 … மக்கள்செய்திமையம் ஆசிரியரை மிரட்டும் போதே, பாலியியல் விவகாரத்தின் பின்னணியில் இவர்கள் இருப்பது உறுதியாகிவிட்டது..

 

 

 

 

                   

Comments

comments