பொள்ளாச்சி…காமவேட்டை- மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய நால்வர் கூட்டணிக்கு அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்தார்கள். அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் மட்டும் சிக்கியுள்ளார். இந்த ஐந்து பேர்களுடன் வழக்கை முடிக்க, ஆளும் கட்சியும், காவல்துறை அதிகாரிகளும் முடிவு செய்திருப்பதுதான் வேதனையாக இருக்கிறது..

    பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள்ஜேம்ஸ்ராஜா,வசந்த் , ஹெரான், கல்யாணி என்கிற கல்யாணசுந்தரம் ஆகியோர், காமவேட்டை கும்பலுக்கு பின்னணியில் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் செய்தி வெளியானவுடன் மக்கள்செய்திமையத்தின் ஆசிரியருக்கு தொடர் மிரட்டல் வந்துக்கொண்டே இருந்தது.

 திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் இந்த நான்கு பேரும், அரசியல்வாதிகளின் பக்கபலம் இல்லாமல் செயல்பட்டு இருக்க முடியாது..

  70102 23203 என்ற செல்போன் எண்ணில் பேசியவர் தன் பெயரை சொல்ல மறுத்து, அவதூறு வழக்கு  போடுவேன் என்று மிரட்டினார். ஆனால் அவர் பேசிய போது, சிங்கப்பூர் சென்ற போது எடுத்த போட்டோ, பேஸ் புக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை உளறி கொட்டினார். பேஸ் புக்கில் இருப்பது உறுதியாகிவிட்டது.

 98421 23203 என்ற செல்போனில் இருந்து பேசியவர், கல்யாணிக்கு தொடர்பே இல்லை. கல்யாணி பெயரை பயன்படுத்தியது தவறு என்று வாதம் செய்தார்.. சரியுங்கள்.. உங்கள் மறுப்பு, விளக்கத்தை இ-மெயில் ஐடிக்கு அனுப்புங்கள் என்று கூறினோம்.. ஆனால் மறுப்பு விளக்கம் அனுப்பவில்லை.. ஆனால் இரண்டு செல்போன் எண்களில் கடைசி ஐந்து எண்.23203 என்பது குறிப்பிடத்தக்கது..

 இந்த இரண்டு எண்களிலிருந்து பேசியவர்கள், கல்யாணி என்கிற கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் என்பது உறுதியாக தெரிகிறது. தங்களுக்கு பாலியியல் கும்பலுக்கும், எந்தவித தொடர்பும் இல்லை என்றால் அறிக்கை வெளியிடலாமே..

    பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார்,  24மணி நேரமும் தன்னுடன் இருக்கும் உதவியாளர் சுபாகரனை  மிரட்டுவது, கட்ட பஞ்சாய்த்து செய்வது உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்துவார். மேலும் பார் நாகராஜன், புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய போது, பார் நாகராஜன் உடன் சென்றவர் சுபாகரன். ஆனால் சுபாகரன் மீது, வழக்கு போடவில்லை..சுபாகரன் தொடர்பாக நாம் காவல்துறை அதிகாரிகளை கேட்ட போது, உண்மை என்பதை ஒப்புக்கொண்டார்கள்..

 முன்னாள் கவுன்சிலர் வசந்த், அனுமதி பெறாமல் ஆலையாற்றில்  arivu thirukovil feeder canel road அருகில் பண்ணை வீடு வைத்துள்ளார். இந்த பண்ணை வீட்டில் சட்டத்துக்கு புறம்பாக பல செயல்கள் நடப்பதாக தெரிகிறது..

 காவல்துறை அதிகாரிகள் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற முயற்சி செய்வது உறுதியாக தெரிகிறது.

 பொள்ளாச்சி பாலியியல் சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

சிபிஐ விசாரணை தொடங்கியதும், மக்கள்செய்திமையம் சேகரித்து அனைத்து தகவல்களை, சிபிஐயிடம் எழுத்து மூலம், ஆதாரங்களுடன் கொடுக்க முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக சிபிஐ இயக்குநருக்கு மக்கள்செய்திமையம் கடிதம் அனுப்பி உள்ளது.

 சிபிஐ விசாரணைக்கு அரசாணை வெளியிட்ட பிறகும், சிபிசிஐடி விசாரணை தொடருகிறதோ என்ற நம் சந்தேகத்துக்கு பதில் கிடைக்கவில்லை.

 அண்ணா பெல்டில் அடிக்காதீங்க..அண்ணா.. வலிக்குது..நானே கழட்டிறேன் என்று மாணவியின் கதறலை கேட்டப்பிறகும், எப்படி அமைதியாக இருக்க முடியும்.

                   

 

Comments

comments