பொதுப்பணித்துறையின்…நீர்வள ஆதாரத்துறையில்..ரூ853 இலட்சம் ஊழல்

பொதுப்பணித்துறை –  நீர்வள ஆதாரத்துறையில் உள்ள அதிகாரிகள்  போலி பில் போடுவதில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்கள்..பருவ மழையால் மக்கள்  அடிப்படை வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, நிலத்தடி நீர் உயர, குடி நீர் பற்றாக்குறையை போக்க என்று பருவ மழைக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகளுக்காக 30.10.17ல் அரசாணை எண்[2டி] 81ல் ரூ853.15 இலட்சம் ஒதுக்கீடு செய்து வெளியிடப்படுகிறது.

  சென்னை ஆரணியாறு டிவிசனுக்கு ரூ258.50 இலட்சம், கொசஸ்தலையாறு டிவிசனுக்கு ரூ217.10 இலட்சம், கீழ் பாலாறு டிவிசனுக்கு ரூ53.5 இலட்சம், விருத்தாசலம் வெள்ளாறு டிவிசனுக்கு ரூ83.50 இலட்சம், சிதம்பரம்கொலரின் டிவிசனுக்கு ரூ240.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது..

 30.10.17ல் அரசாணை வெளியிட்டு, நிதி சம்பந்தப்பட்ட டிவிசனுக்கு செல்வதற்கு பருவமழை காலம் முடிந்திருக்கும். ஆனால் பருவ மழைக்கு முந்திய காலம் என்ற பெயரில் போலி பில் போடப்பட்டுள்ளது..

 உதாரணமாக ஆரணியாறு டிவிசனில் கூவம் ஆறு, ஒட்டேரி கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவைகளில் Removal of floating materials, vegetations and other obstruction என்ற பெயரில் ரூ4 இலட்சம், ரூ5 இலட்சம்  என்று தொடங்கி தனித் தனியாக போலி பில் போட்டு முறைகேடு நடந்துள்ளது…

 ரூ853 இலட்சத்துக்கு எம்.புத்தகம் கேட்டால், இன்று வரை நமக்கு கிடைக்கவில்லை. கூவம் ஆற்றில் LS 3320m – 5490m, LS 5490m-6700m உள்ளிட்ட பல பகுதிகளை பார்த்தோம் பணி நடந்ததற்குகான அறிகுறிகளே இல்லை..

 Restoration of Breached portion at LS 500m in new bangaru supply channel in poonamallee taluk என்று ரூ3 இலட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது… இந்த பகுதியை தேடினேன் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை…யாராவது கண்டுபிடித்து கொடுங்கள்..

 ரூ853.15 இலட்சம் போலி பில் தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆளுநர் அவர்களுக்கும், விஜிலென்ஸ் இயக்குநருக்கு புகார் அனுப்பிவிட்டு காத்திருக்கிறோம்…

 

 

 

                            

                            

Comments

comments