பெரு நகர சென்னை மாநகராட்சி- யார் இந்த நந்தகுமார்- ரூ2கோடி லஞ்ச பணத்துடன் ஒடிவிட்ட ராஜேந்திரன்..

பெரு நகர சென்னை மாநகராட்சியில் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாகவும், விஜிலென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு போடுவேன் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்..

 பெரு நகர சென்னை மாநகராட்சியில், ஆணையர் கார்த்திகேயனை விட அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரி எல்.நந்தகுமார் கண்காணிப்பு பொறியாளர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் மழை நீர் வடிகால் பிரிவு.. திமுகவில் அதிகாரமையத்தில் வலம் வரும் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.குமாரின் மச்சினன்..

 பெரு நகர சென்னை மாநகராட்சியில் பேருந்து – சாலை பிரிவில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றினார். அங்கு சுமார் ரூ200கோடிக்கு ஊழல் நடந்தது. ரூ200கோடி ஊழலில் சிக்கிய நந்தகுமார், தலைமைச் செயலக அதிகாரமையம் மூலமாக தப்பிவிட்டார். அந்த துறையில் நிதி இல்லை இனி, ஊழல் செய்ய முடியாது என்ற  காரணத்தால், மழை நீர் வடிகால் பிரிவின் சிறப்பு திட்டத்திற்கு மாறிவிட்டார்..

 மழை நீர் வடிகால் பிரிவிற்கு அரசாணை எண்-1/2.1.15ன் படி ரூ1101.43கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை நகரத்துக்கு தனியாக மழை நீர் வடிகால் அமைக்க, ரூ1720கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் நந்தகுமாரின் ஆசியால் ஊழல் கூத்து தொடங்கிவிட்டது.

 மழை நீர் வடிகால் அமைக்கும் திட்ட டெண்டரில் ஊழல் அரங்கேறியது. தற்போது டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரு நகர சென்னை மாநகராட்சியின் எந்த துறையில் நிதி இருக்கிறதோ அந்த துறைக்கு மாறிவிடுவார் பொன்குமார் மச்சினன் நந்தகுமார்..

  கண்காணிப்பாளர் பொறியாளர் நந்தகுமார், தன்னுடைய அலுவலக உதவியாளர் ராஜேந்திரன், ஒய்வு பெற்றப்பிறகு ஒராண்டு நீட்டிப்பு வாங்கி கொடுத்தார். ராஜேந்திரன் மீறி நந்தகுமார் அலுவலகத்தில் எறும்பு கூட போகமுடியாது..

 ராஜேந்திரன் சில மாதங்களுக்கு முன்பு, நந்தகுமார் வாங்கிய இலஞ்சம் பணத்தில் ரூ2கோடியை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்..இது வரை ராஜேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. நந்தகுமார் அலுவலகத்தின் பீரோ சாவியுடன் ராஜேந்திரன் ஒடிவிட்டதால், வேறு வழியில்லாமல் பீரோவை உடைத்து கோப்புகளை எடுத்தார்கள்..

  கண்காணிப்பு பொறியாளர் நந்தகுமாரின் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..

   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவில் அதிகாரமையத்தில் வலம் வரும் பொன்.குமாரின் மச்சான் நந்தகுமார் மீது வழக்கு போடுவாரா…

 

 

 

   

 

     

 

 

Comments

comments