பெரு நகர சென்னை மாநகராட்சி-ஒப்பந்தகாரர் சபேசனிடம் ரூ15கோடி பறிமுதல்..வருமான வரித்துறை அதிரடி..சிக்கும் தலைமை பொறியாளர் நந்தகுமார்..

பெரு நகர சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் தலைமை பொறியாளராக நந்தகுமார் பதவி உயர்வு பெற்றார்.  தலைமை பொறியாளர் நந்தகுமாரிடம் தான் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான பணம் பட்டுவாடா பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 இந் நிலையில் எல்.இ.டி பல்பு, கோபுரம் மின் விளக்கு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தகாரர் சபேசன் அலுவலகம், வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சபேசனிடமிருந்து ரூ15கோடி வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.

 சபேசன், தலைமை பொறியாளர் நந்தகுமாரின் பினாமி ஒப்பந்தகாரர் சபேசன்.. தலைமை பொறியாளர் நந்தகுமார் வீடு, அலுவலகம், பினாமி வீடுகளில் ரெய்டு நடத்தினால் ரூ100கோடி பறிமுதல் செய்யலாம்..

 நந்தகுமாரின் பின்னணியில் இருக்கும் கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன்,  செயற் பொறியாளர் சரவணமூர்த்தி,நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, செயற் பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் ஆனந்த்ராஜ், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்ட பல அதிகாரிகள் வீட்டில் மக்களவை தேர்தலுக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது..

 சபேசன், ஏப்ரல் 2015 – ஜூலை 2016ல் மண்டலம் -4 ஆர்.கே .நகர் தொகுதியில் மட்டும் ரூ12.27 கோடிக்கு 4621- 40 வாட்ஸ் எல்.இ.டி மின் விளக்கு மாற்றப்பட்டதாகவும்,  1189 –எல்.இ.டி விளக்கு சீரமைக்கப்பட்டதாகவும், கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டதாகவும் போலி பில் போட்டார். இதே போல் கடந்த மூன்றாண்டுகளில் சபேசன் பெயரில் ரூ100கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளது..இந்த பணம் எல்லாம் மக்களவைத் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு கொடுக்க, பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

  பெரு நகர சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும்  பொறியாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

 

 

Comments

comments