பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா?..

பெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்   “PHONY” யா என்ற கேள்வி சென்னை மாநகர மக்களிடம் எழுந்துள்ளது.

 ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரை பெயரில் Quotation work order அதாவது டெண்டர் இல்லாமல் பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.  அதே போல் SPK & co  நிறுவனத்துக்கும் டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டு வருகிறது.

  பெரு நகர சென்னை மாநகராட்சியில் ஊழல் கடலாக ஓடுவதால், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் அளிக்க மறுக்கிறார்கள்.. ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரைக்கு 2017 ஏப்ரல் முதல் 2018 டிசம்பர் வரை கொடுக்கப்பட்ட ஒப்பந்தபணிகளின் விவரங்கள் கேட்டால், தகவல் பெறும் உரிமைச் சட்ட பிரிவு8(1)(j)வில் தகவல் வழங்க மறுக்கிறார்கள்..   

 SPK & co , KCP engineersதொடர்பாக தகவல் அளிக்க மறுக்கிறார்கள். பணிகளின் எம்.புத்தகம் தர மறுக்கிறார்கள்.. பெரு நகர சென்னை மாநகராட்சியின் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ பற்றி அடிப்படை அறிவே இல்லை என்பது உறுதியாகிறது.

 ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரையை பற்றி, பெரு நகர சென்னை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலரிடம்  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், முந்திரிகொட்டை மாதிரி பேருந்து சாலைகள் துறைகள் தகவல் அளிக்க முடியாது என்று பதில் அளிக்கிறார்கள்..

 இதிலிருந்து தாமஸ் அய்யாதுரை பெயரில் ஊழல் நடக்கிறது என்பது உறுதியாகிவிட்டது..

 பெரு நகர சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற, முயற்சி செய்து வரும் கண்காணிப்பாளர் பொறியாளரும், ஊழல் திலகம் என்ற பட்டம் பெற்ற அதிகாரி மக்கள்செய்திமையம் ஆசிரியர் அன்பழகனை கொலை செய்துவிடுவேன் என்று தன் சகா அதிகாரிகளிடம் வெளிப்படையாக பேசிவருகிறார்.. அந்த அதிகாரி திமுக பிரமுகருக்கு நெருங்கி உறவினர்..

 திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவும்அந்த  ஊழல் திலகம் அதிகாரிக்கு துணை போகிறார்… இந்த நிலையில்தான் சென்னையில் திமுக உள்ளது..

     

 

 

Comments

comments